அரபு எமிரேட்சில் ஒரே நாளில் 401 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020
Share
Advertisement

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று ஒரு நாளில் 401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்சிலும் (UAE) கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 401 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. நேற்று ஒரு நாளில் தொற்று பாதிப்புக்கு 2 பேர் பலியாகினர். 492 பேர் குணமடைந்துள்ளனர். அரபு எமிரேட்சில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,854 ஆக அதிகரித்தது.


latest tamil news



மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 333 ஆகவும், நாட்டில் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,140 ஆகவும் உயர்ந்துள்ளது. UAE யில் நேற்று ஒரு நாளில் 50,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X