சீன பொருட்களுக்கு 'பை': சுதேசி பொருட்களுக்கு'கை' கொடுத்த வியாபாரிகள்..!

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரத்திற்கு மத்தியில், சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு கைகொடுக்கும் வகையில் , ரக்ஷா பந்தனை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் 5 லட்சம் ராக்கி கயிறுகளை விற்பனைக்காக தயாரித்துள்ளனர்.



latest tamil news



கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன - இந்திய வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சீன வீரர்களின் அத்துமீறலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து சீன ராணுவம் இதுவரை தகவல் வெளியிடவில்லை. சீனாவின் அத்துமீறலை அடுத்து நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பிரசாரம் தீவிரமடைந்தது.

அதனை தொடர்ந்து இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கண்டறியப்பட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், வட இந்தியாவில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா வரும் ஆக.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, உ.பி.,யின் பிரக்யாராஜை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் சுமார் 5 லட்சம் ராக்கி கயிறுகளை தயாரித்துள்ளனர். பட்டு நூல், உலோகங்கள், சந்தனம், கண்ணாடி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வண்ணமயமான ராக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்தாண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ள பிரயாக் வியாபாரிகள் , மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இதற்கான ஆர்டரை அளித்துள்ளனர். பிரயாக் வியாபாரிகள் சங்க தலைவர் விஜய் அரோரா கூறுகையில், 'சீன பொருட்களை முற்றிலும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம். நடப்பு திருவிழா சீசனில், ராக்கி உள்பட இந்தியாவில் தயாரான சுதேசி பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.
தேசிய ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுமார் 200க்கும் மேற்பட்டமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ராக்கி கயிறு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பஹாரியா மற்றும் கர்ச்சனா தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. திங்கள் முதல்,மற்ற தொகுதிகளிலும் பயிற்சி வழங்கப்படுமென ஊரக வாழ்வாதார திட்ட அதிகாரி சரத்குமார் சிங் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
16-ஜூலை-202017:10:11 IST Report Abuse
mathimandhiri பரவாயில்லை. உலகளாவிய மெகா சர்வர்களெல்லாம் அந்தந்த நாட்டிலேயே இருக்கட்டும். அதற்காக அற்ப ஸ்குரூ டிரைவர், பின்கள், ஸ்டாப்பிளர்கள், சிறிய கட்த்ஹய்கள், கொசு பேட்டுக்கள், இவை போன்ற பல்லாயிரக் கணக்கான சிறு பொருள் தயாரிப்பாளர்கள் சில பேராசை மிகுந்த உள்ளூர் வியாபாரிகளால் தொழிற்சாலைகளை இழுத்து மூட நேர்ந்தது. தரமற்ற மலிவு விலை சீனாப் பொருட்கள் சந்தையை அவர்கள் மூலம் ஆக்கிரமிக்கது தொடங்கின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் "சிலுக்கு சட்டை, சீனா பொம்மை பலூன் வேணுமா" என்ற பழையது தமிழ் படப்பாடல் ஒன்று உண்டு. அந்த அளவிலேயே இருந்த சீனப்பொருட்களின் இறக்குமதி அசுரத்தனமாக வளர்ந்தது எலக்ட்ரானிக் பொருள் சந்தை மூலமாகவே தான். இனி இது போன்ற மொபைல் டி.வி உதிரிபாகங்கள் ஆகிய எலெக்ட்ரானிக் பொருட்களை சீனத்தரத்துக்கு ஈடாக தைவான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்-நாம் நம் தேவைக்கு ஏற்ப இங்கேயே தயாரிக்கும் தருணம் வரையில். இது முடியாதா? லாபிக்களை ஒடுக்கினால் முடியும். சீனாவை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட முடியும்.
Rate this:
Cancel
Nagarajan Ks - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202009:25:09 IST Report Abuse
Nagarajan Ks இதை கூட இந்தியாவில் தயாரிக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தார்களா? வெட்கக்கேடு. ராணுவ சாதனங்களை எப்படி செய்வார்கள்? இறக்குமதி செய்ய வேண்டியதுதான்.இந்தியர்கள் ஒன்றுக்கும் உதவாத அற்பர்கள் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. திருடவும், ஊழல் செய்யவும் மட்டுமே மகா திறமைசாலிகள்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
14-ஜூலை-202007:44:47 IST Report Abuse
நிலா அருமை அப்படியே சீனாவில் உள்ள இந்திய வர்த்தகர்களையும் இந்தியாவுக்கு வரவழையுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X