அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் துவங்க வாங்க... 5 நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Tamiladu, CM, Palanisamy, தமிழ்நாடு, தொழில், முதல்வர், பழனிசாமி, வெளிநாட்டு முதலீடு, இபிஎஸ், கடிதம்

சென்னை : தமிழகத்தில், தொழில் துவங்க வரும்படி, ஐந்து தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அந்த வகையில், 'பெடக்ஸ்' நிறுவன தலைவர் பெரட்ரிக் டபிள்யு ஸ்மித்; யு.பி.எஸ்., நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டேவிட் பி அப்னே; 'சவுதி அரெம்கோ' நிறுவன தலைவர் அமின் எச் நாசர்.மற்றும் 'எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன்' நிறுவன தலைவர் டாரன்வுட்ஸ், 'சி.பி.சி., கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தலைவர் ஜியா ருயே வூ ஆகியோருக்கு, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள் வதில் உள்ள சாதகமான அம்சங்கள்; சிறப்பான தொழில் சூழல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கு, தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும். தேவைக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும், முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
14-ஜூலை-202022:27:26 IST Report Abuse
adalarasan அதை விட, சுந்தர் பிட்சை googol, தலைவரை, கூப்பிட்டு,, தமிழில், பேசலாமா?,
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். இப்படியே வாங்கோ வாங்கோ என்று கூவிக் கொண்டே இருக்கவேண்டியதுதான். தினம் தினம் துப்பாக்கி சூடு ரவுடிகள் சாம்ராஜ்யம்! விதம் விதமான ஊரடங்கு வயிறடங்கு என்று இருந்தால் யார் இங்கே நிம்மதியாக தொழில் தொடங்க முடியும்?. எங்கள் தள்ளபதி முதல்வரானால் மட்டுமே தமிழகம் தொழில் வளர்ச்சி பெறும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஜூலை-202007:54:22 IST Report Abuse
RajanRajan எத்தினி தபா இப்படியே கடிதம் எழுதி பொழுது போகுமோ ஞானபண்டிதா. ஒருத்தனாச்சும் வந்து தேங்காய் உடைச்சானா. இல்லையே. ஏன் வரமாட்டேங்கிறானுங்கன்னு சரியான அந்த சரியான ஊழல் காரணத்தை கண்டுபிடிச்சு அந்த ஒழுக்கை முதலில் அடைத்துவிடு முருவா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X