அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் இலவச காப்பீடு; அரசுக்கு ஸ்டாலின் ஆலோசனை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
அனைவருக்கும், இலவச, மருத்துவ காப்பீடு, ஸ்டாலின் , ஆலோசனை, பாதுகாப்பு, முதல்வர், நடவடிக்கை,பணப்புழக்கம்

சென்னை : 'அனைத்து மக்களையும், இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்து, சமூக பாதுகாப்பு கிடைக்கச் செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், யோசனை தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:பொருளாதார வல்லுனர்கள், என்னிடம் தெரிவித்துள்ள ஆலோசனைகளில், முதல்வர் உடனே நிறைவேற்ற வேண்டியவை விபரம்:

* ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிப்பதற்கு, அனைவருடைய கையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்

* ஊடரங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும், ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால், அறவே தடை செய்யக் கூடாது. பொருட்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும், சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும்

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்

* கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை, ஆண்டுக்கு, 250 நாட்களாக உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விகிதம் மாற்றி அமைக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும். கொரோனா நெருக்கடி தீரும் வரை, மாநிலங்கள் தங்களை, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்

* தமிழகத்தில் உள்ள, அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், பொதுவான வருமான கட்டமைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். நெருக்கடி நேரங்களில் மட்டுமல்லாமல், மற்ற காலங்களிலும், அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை நிதிப் பாதுகாப்பை வழங்க முடியும்

* அனைவரையும், இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளையும், அரசு இலவச மருத்துவப் பாதுகாப்பு திட்டத்தில் சேர்த்தால் தான், அனைவருக்கும் சமூக பாதுகாப்பு கிடைக்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
14-ஜூலை-202019:42:18 IST Report Abuse
கொக்கி குமாரு தினமலருக்கு ஒரு வேண்டுகோள். சுடலை ஓரக்கண்ணால் யாரை இந்த லுக் விடுறாருன்னு அந்த போட்டோவையும் போட்டால் தமாஷா இருக்கும்.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
14-ஜூலை-202019:34:08 IST Report Abuse
வல்வில் ஓரி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு அர்ச்சகருக்குப் பணி நியமனம்
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
14-ஜூலை-202019:30:32 IST Report Abuse
SIVA G  india சாதாரணமா போனாலே காப்பீடு இருந்தால் ஒன்றுக்கு பத்து மடங்கு பில். வைத்தியம் செய்யாமலே செய்தாக கணக்கு காட்டி சிக்கி இருக்கிறார்கள். முக்கால் பங்கு மருத்துவமனை இந்த கூட்டதோடது. அவர்கள் கட்சி உறுப்பினர் பாதி பேர் கட்டினாலே பணம் எங்கோ போய் நிற்குமெ.கட்சி உறுப்பினர்களுக்கு பிரியாணில் முடிந்துவிடும் நூறு நாள் வேலை மாதிரி பெயரை சேர்த்தா கொரானா காசு வலிகாம அள்ளலாம். மிக பெரிய ஊழலுக்கு அஸ்திவாரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X