'கொரோனாவ ஒழிக்க முடியல... ஒளிச்சிட்டோம்!' மறைக்கப்படும் சாவுகள்... புதைக்கப்படும் உண்மைகள்!

Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாடி வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.'வாக்கிங்' சென்றிருந்த மித்ரா, களைப்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.''என்னக்கா, பேப்பர்ல ஸ்பெஷல் நியூஸ் ஏதாச்சும் இருக்கா,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''பக்கத்துக்கு பக்கம் கொரோனா செய்திதான் இருக்கு. நம்ம மாவட்டத்துல, 'கொரோனா' பாதிக்கப்பட்டவங்க எண்ணிக்கை, 1,300ஐ தாண்டிடுச்சாம்.
 'கொரோனாவ ஒழிக்க முடியல... ஒளிச்சிட்டோம்!' மறைக்கப்படும் சாவுகள்... புதைக்கப்படும் உண்மைகள்!

மாடி வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.'வாக்கிங்' சென்றிருந்த மித்ரா, களைப்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.''என்னக்கா, பேப்பர்ல ஸ்பெஷல் நியூஸ் ஏதாச்சும் இருக்கா,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''பக்கத்துக்கு பக்கம் கொரோனா செய்திதான் இருக்கு. நம்ம மாவட்டத்துல, 'கொரோனா' பாதிக்கப்பட்டவங்க எண்ணிக்கை, 1,300ஐ தாண்டிடுச்சாம். 30க்கும் மேற்பட்டவங்க உயிரிழந்திருக்காங்க; ஆனா, 15 பேர் மட்டுமே நம்ம மாவட்டத்துக்காரங்க; மத்தவங்க, வெளிமாவட்டத்தை சேர்ந்தவங்கன்னு, 'ஹெல்த் டிபார்ட்மென்ட்' ஆபீசர்ஸ் சப்பைக்கட்டு கட்டுறாங்க,''''எந்த ஊர்க்காரங்களா இருந்தா, என்ன? இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில தானே, 'டிரீட்மென்ட்' கொடுத்தாங்க. சிகிச்சை பலன் இல்லாம இறந்துட்டாங்கன்னா, ஒரே எண்ணிக்கையில சொல்ல வேண்டியதுதானே. இதென்ன, பட்ஜெட் கணக்கா? கோவை கணக்கு; திருப்பூர் கணக்கு; நீலகிரி கணக்குன்னு, எதுக்கு பிரிக்குறாங்க,''''மித்து, 'ஹெல்த் ஆபீசர்'களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்காங்க. இதுக்கு முன்னாடி, மாவட்ட சுகாதாரத்துறை தரப்புல இருந்து, 'கொரோனா' பாதிக்கப்பட்டவங்க பட்டியல், 'ரிலீஸ்' செஞ்சாங்க. இனி, வெளியிடக்கூடாதுன்னு தடை செஞ்சிட்டாங்க,''''அதே மாதிரி, 'கொரோனா' பரிசோதனை செஞ்சவங்க, 'ரிசல்ட்'டையுமே வெளியிட மறுக்குறாங்களாம். இதனால, சோதனை செஞ்சவங்க, பதற்றத்துல இருக்காங்க,''''அப்படியா, 'ரிசல்ட்'டை மறைக்கிறதுனால, என்ன பிரயோஜனம்,''''என்னப்பா, இப்படி கேட்டுட்ட. சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதுார், செல்வபுரம், தெலுங்குபாளையம், பீளமேடு ஏரியாவுல சமூக பரவலா மாறுச்சே. நோய் பரவுன இடங்களை கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் தனிமைப்படுத்திட்டு வர்றாங்க. இதெல்லாம் தலைவலி பிடிச்ச வேலையா இருக்கு.''அதனால, பாதிக்கப்பட்ட ஏரியாவை வெளியே சொல்லாம, மறைக்கிறாங்களாம். இனி, நோய் பாதித்த நபர் வசித்த வீடு, இருபுறமும் உள்ள பக்கத்து வீடு, பின்பக்க வீடுகளை மட்டும் தனிமைப்படுத்தப் போறாங்களாம்,''''நீதிபதி ஒருத்தருக்கு நோய் தொற்று இருந்ததா, சொன்னாங்களே,''''அதுவா, அந்த நீதிபதியை பார்க்குறதுக்கு மும்பையில இருந்து ஒருத்தரு வந்திருக்காரு. அவர் மூலம் பரவியிருக்கு. நீதிபதி, கோர்ட் சேம்பர்ல சக நீதிபதிகள் மூன்று பேருடன் ஒன்றாக அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டிருக்காரு. அவுங்களுக்கும், கோர்ட் ஊழியர்களுக்கும் 'டெஸ்ட்' எடுத்திருக்காங்க,''''இதுல, கொடுமை என்னான்னா, அவுங்களுக்குமே, 'டெஸ்ட்' ரிசல்ட் சொல்லாம சுகாதாரத்துறை அதிகாரிகள் மவுனமா இருக்காங்க. நீதிபதிகளும், ஊழியர்களுமே அச்சத்துல இருக்காங்களாம்,''அடப்பாவமே,'' என, 'உச்' கொட்டிய மித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்அப்' மெசேஜ்களை பார்க்க ஆரம்பித்தாள்.''என்ன, மித்து! ஏதாச்சும் முக்கிய தகவல் இருக்கா,''''அக்கா, 'கொரோனா' பரவல் தடுப்பு பணியை கண்காணிச்சு, வேகப்படுத்துறதுக்காக, நம்ம மாவட்டத்துக்கு சிறப்பு செயலரா, முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங்கை நியமிச்சாங்க. அவரு, நம்மூர் பக்கம் எட்டி கூட பார்க்கலை.''இங்க இருக்கற அதிகாரிங்க, இஷ்டப்படி செயல்படுறாங்க. நோய் பாதிப்பு எவ்ளோ பேருக்குன்னு கேட்டா, கலெக்டர், ஒரு புள்ளிவிவரம் சொல்றாரு; இ.எஸ்.ஐ., டீன், ஒரு புள்ளி விவரம் சொல்றாங்க; ஜி.எச்., டீன், வேறு விதமா சொல்றாரு. எதுவுமே, 'மேட்ச்' ஆகுறதில்லை. எல்லோரும் சேர்ந்து, நோய் பாதிப்பை மறைக்கிறாங்கங்கிறது மட்டும் தெளிவாத் தெரியுது,''''அதெல்லாம் இருக்கட்டும். கோவில் திறக்கக்கூடாது; பூங்கா செயல்படக்கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா, வடவள்ளியில, 'ஜிம்' மட்டும் செயல்படுதே; அது மட்டும் கார்ப்பரேஷன் அதிகாரிங்க கண்ணுக்குத் தெரியாதா? மீன் கடையை 'சீல்' வைக்கிறாங்க; நகைப்பட்டறையை, 'சீல்' வைக்கிறாங்க; அரசு உத்தரவை மீறி செயல்படுற, 'ஜிம்'மை மூட வேண்டியதுதானே! அவுங்களை யாரு தடுக்குறது,'' என, பொங்கினாள் சித்ரா.''அக்கா, பொறுமையா கேளுங்க! வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்ல இதுக்கு முன்னாடி எஸ்.ஐ.,யா இருந்தவரு, இப்ப, துடியலுார்ல வேலை பார்க்குறாரு. அவரு, இங்க தான் பயிற்சி எடுப்பாராம். அவருக்காக, தினமும் திறந்து வைக்கச் சொல்லி, நெருக்கடி கொடுக்குறாராம்,''''அவரு, 'மைக்'குல திட்டு வாங்குன, எஸ்.ஐ., தானே,''''அவரே தான்! திருட்டு போன நகையை மீட்டதுல, கொஞ்சத்தை அமுக்கிட்டதா கேள்விப்பட்டதும், 'மைக்'குல பழைய எஸ்.பி., வறுத்தெடுத்தாராம். அவரது செயல்பாடுகளை உளவுத்துறைக்காரங்க 'லிஸ்ட்' போட்டு, மேலிடத்துக்கு அனுப்பியிருக்காங்களாம்,''''அப்படியா,'' என, ஆச்சரியமாக கேட்டபடி, சமையலறைக்குள் சென்ற சித்ரா, காபி போட ஆரம்பித்தாள்.பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ஆட்டம் தாங்க முடியலையாமே,'' என, கிளறினாள்.''மித்து, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ஒவ்வொருத்தரும், அவுங்கவுங்க வேலைபார்க்கற மண்டலத்துல, 'குறுநில மன்னர்'கள் போல, கோலோய்ச்சிக்கிட்டு இருக்காங்க. 'கொரோனா' தடுப்பு பணியில ஈடுபடுற ஆபீசர்களுக்கு வாகன வசதி செஞ்சு கொடுக்க, கமிஷனர் சொல்லியிருக்காரு.''அதுக்கு, 'இன்னோவா' கார் தான் 'அலாட்' பண்ணனும்; 'டி போர்டு' வண்டியா இருக்கக்கூடாது; வெள்ளை நிற நம்பர் பிளேட் வண்டிதான் கொடுக்கணும்னு சொல்றாங்களாம். நான் ஒசந்தவனா; நீ ஒசந்தவனான்னு அதிகாரிகளுக்குள் ஈகோ வெடிச்சிட்டு இருக்கு,''''இதெல்லாம் டூமச்சா தெரியலை. ஊரெல்லாம் நோய் பரவிட்டு இருக்கு; இவுங்களுக்கு கார் ஒதுக்குறதுல பஞ்சாயத்தா, வெளங்கிடும்,'' என, நொந்து கொண்ட மித்ரா, ''கார்ப்பரேஷனுக்கு புதுசா துணை கமிஷனர் நியமிச்சாங்களே, அவுங்க செயல்பாடுகளை சொல்லவே இல்லையே,'' என, பேச்சை மாற்றினாள்.''அவுங்களா, 'டிபார்ட்மென்ட்' வாரியா ஆய்வு கூட்டம் நடத்தி முடிச்சிட்டாங்க; ஜோனல் ஆபீஸ்களுக்கும் போயிட்டு வந்திட்டாங்க. பறக்கும்படை அதிகாரிகளை கூட்டிட்டு, ஒவ்வொரு ஏரியாவா, ஆய்வுக்கு போறாங்க,''''சில முக்கியமான பைல்கள், 'ஜம்ப்' ஆகி, போறதா, தகவல் கெடைச்சிருக்கு. 'லெப்ட், ரைட்' வாங்கியதும், பழைய நாலு பைல் டேபிளுக்கு வந்திருக்கு. இனி, அரசு விதிமுறைப்படி, பைல் 'மூவ்' ஆகணும்னு, கறாரா சொல்லிட்டாங்களாம்,''''பைல் மூவிங் ரிஜிஸ்டர் வச்சிருப்பாங்களே,''''அந்த சிஸ்டத்தை முறைப்படி கையாண்டாங்கன்னா, பைல் எந்த இடத்துல தேங்கியிருக்குன்னு, ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இனி, செய்வாங்களான்னு பார்ப்போம்,''''கார்ப்பரேஷன் ஆபீசரை ஒருத்தரை துாக்குனதுக்கும், 'லேடி' அதிகாரி காரணம்னு சொல்றாங்களே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''நெல்லையில் இருந்து, 'அயல்பணி'யா, 'டிரான்ஸ்பராகி' வந்த, 'லேடி' அதிகாரிக்கும், இட மாறுதல் உத்தரவு வந்திருக்கிற அதிகாரிக்கும் ஏழாம் பொருத்தமாம். சென்னையில இருக்குற அதிகாரியிடம் உள்ள நெருக்கத்தை, 'யூஸ்' பண்ணி, உயரதிகாரியை மாத்திட்டாங்களாம்.''லேடி அதிகாரிக்கு, கார்ப்பரேஷன் 'குவார்ட்டர்ஸ்' ஒதுக்கியிருக்காங்க. இருந்தாலும், 'அபார்ட்மென்ட்'டுல குடியிருந்து, 'வருவாய்' ஈட்டுற வேலையை செய்றாங்களாம்,'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள்.தமிழக அமைச்சரவை கூடுவது தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதை கவனித்த மித்ரா, ''அக்கா, அரசியல் கட்சிக்காரங்க, இப்பவே, தங்களுக்கு ஆதரவான தொகுதியை தயார் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம். ஆளுங்கட்சியை சேர்ந்த, கார்ப்பரேஷன்ல அதிகாரம் செலுத்துற வடவள்ளிக்காரர், வடக்கு தொகுதியில களமிறங்க, 'பிளான்' பண்ணியிருக்காராம்.''தி.மு.க., தரப்பிலும், அதே ஊர்க்காரரை இறக்கறதுக்கு, திட்டம் போட்டிருக்காங்களாம். அதுக்காக, போன எலக்சன்ல போட்டியிட்ட, 'லேடி'யை, கட்சியில ஓரங்கட்டிட்டாங்க. ஒரே ஏரியாவை சேர்ந்தவங்களா இருக்கறதுனால, தேர்தல்ல போட்டி கடுமையா இருக்கும்னு நெனைக்கிறாங்க,'' என்ற படி, காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள்.''போலீஸ் அதிகாரிகளை மாத்திட்டாங்களே, விசாரிச்சியா,'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள் சித்ரா.''அக்கா, ஆளுங்கட்சி தரப்புல, சட்டசபை எலக்சனுக்கு தயாராக ஆரம்பிட்டாங்க. சவுகரியப்படுற அதிகாரிகளை நியமிக்குறாங்களாம். அடுத்த ரவுண்டுல, ஐ.ஜி.,யையும், கமிஷனரையும் மாத்துறதுக்கு வாய்ப்பிருக்குன்னு பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, 'வாட்ஸ்அப்'பில் வந்திருந்த, பழைய பதிவுகளை அழிக்க ஆரம்பித்தாள்.சமையல் வேலையை கவனிக்கத் துவங்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijayakumar - doha,கத்தார்
21-ஜூலை-202013:31:04 IST Report Abuse
vijayakumar நீங்கள் சொல்வது சரி. சரியான அணுகுமுறை இல்லாததால் தான் உயிரிழப்பு கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளைப்போல மக்களை அடைத்து வைக்காமல் பாதித்தவர்களுக்கு நல்ல உணவும் மருந்தும் கொடுத்தாலே போதும். இங்கே சொல்வதைப்போல ஒரு கவனிப்பும் இல்லை. இதுவே பரவலுக்கும் உயிரழப்புக்கும் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X