'பேஸ்புக்' பயன்படுத்த தடை விதிக்க கூடாது: ராணுவ அதிகாரி மனு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
facebook, army, indian army, social media, 'பேஸ்புக்' , தடை ,கூடாது: ராணுவ அதிகாரி மனு


புதுடில்லி :ராணுவத்தில் பணிபுரிபவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அதிகாரி ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சீனாவை சேர்ந்த மொபைல் செயலி நிறுவனங்கள், தங்கள் பயனாளர்கள் குறித்த தகவல்களை, சீன அரசுக்கு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, 'டிக்டாக்' உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது.இதற்கிடையே, நம் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுடன், சமூக ஊடகங்களில் நட்பாக பழகி, எதிரி நாட்டை சேர்ந்தவர்கள், பல தகவல்களை திருடுவதாக, பல்வேறு புகார்கள் வந்தன.


latest tamil news



இதையடுத்து, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட, 89 சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு, சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.இதற்கான உத்தரவை, ராணுவ உளவுத்துறை இயக்குனரகம் வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஜம்மு -- காஷ்மீரில் பணியாற்றும், லெப்டினன்ட் கர்னல், பி.கே.சவுத்ரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.அதன் விபரம்:குடும்பத்தை பிரிந்து, பல்லாயிரம் கி.மீ., துாரத்தில், தனிமையில், ஆபத்து நிறைந்த பணியை மேற்கொள்ளும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தகவல் பரிமாறி கொள்ள, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளன.அதற்கு தடை விதிப்பது, வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். எனவே, இந்த உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு கேவியட் மனுமத்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன மொபைல் செயலி நிறுவனங்கள், அந்த தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவ்வாறு மனுதாக்கல் செய்தால், அரசு தரப்பு விளக்கத்தை கேட்காமல், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு தரப்பில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணம் கூறப்படவில்லை.-

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
16-ஜூலை-202008:50:11 IST Report Abuse
mathimandhiri பார்த்தீர்களா இந்த செயலிகள் தாக்கத்தை? குறிப்பிட்ட செயலி எந்த அளவுக்கு ராணுவ அதிகாரிகளையே வளைத்துப்போடும் அளவுக்குச் சென்றிருக்கும் கூத்தை. ஜக் கோர்ட்டின் நெத்தியடித்த தீர்ப்பு பாராட்டத் தக்கது. மற்ற வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் எந்த ராணுவத்தினருக்கு குடும்பத்தோடு தொடர்பு கொள்ள இருக்கும் போது அரசு நீக்கச் சொல்லும் செயலிகளை நீக்கக் கூடாது என்பது ராணுவத்தினருக்கு அழகல்ல. நல்ல வேளை அரசு தரப்பிலிருந்து கேடு பிடி வருவதற்கு முன் நீதி மன்றமே செயலில் இறங்கியது நல்லாதாய்ப் பொய் விட்டது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-ஜூலை-202003:54:38 IST Report Abuse
blocked user சமூக வலைத்தளங்களில் நேரம் செலவு செய்வது போதை தருவது போல. இராணுவம் என்பது முழு நேர வேலை என்பதை மற்ந்து விடக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X