பொது செய்தி

இந்தியா

‛கொரோனா' மாத்திரை விலை குறைப்பு; தயாரிப்பு நிறுவனம் முடிவு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Glenmark Pharma, COVID 19 drug, Favipiravir, coronavirus

புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'பாபிப்ளூ' என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மருந்து, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறந்த பலனை அளிப்பதாக, கூறப்படுகிறது.

இந்த மாத்திரையை, 'கிளன்மார்க்' நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 21ல், இந்த மருந்து, இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஒரு மாத்திரை, 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மருந்து தயாரிப்புக்கு தேவையான, முக்கிய மூலப்பொருட்களை, இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதி கிடைத்ததை அடுத்து, மாத்திரையின் விலையை குறைக்க, தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.


latest tamil news



இதையடுத்து, ஒரு மாத்திரையின் விலை, 103 ரூபாயில் இருந்து, 75 ரூபாயாக குறைக்கப்படுவதாக, கிளன்மார்க் நிறுவனம், அறிவித்தது. இதே மாத்திரை, சீனாவில், 215 ரூபாய்க்கும், வங்கதேசத்தில், 315 ரூபாய்க்கும், ரஷ்யாவில், 600 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுவதாக, கிளன்மார்க் நிறுவனம், தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202006:55:34 IST Report Abuse
Shiva மருத்துவம் மற்றும் அதை சார்ந்த தயாரிப்பினரும் பெரும் மாஃபியா கூட்டம்...மக்களை ஏமாற்றும் குள்ள நரி கூட்டம்.
Rate this:
Cancel
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202006:49:15 IST Report Abuse
Shiva Pharma industries are big mafias.......
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
14-ஜூலை-202006:17:12 IST Report Abuse
Nathan இனி பாவிபிறவிர் புண்ய பிறவியாக பார்க்கப் படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X