அசோக் கெலாட் அரசுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: சுர்ஜ்வாலா

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Congress, ashok gehlot, randeep surjewala, அசோக் கோலட், அரசு,109 எம்.எல்.ஏ.க்கள் ,சுர்ஜ்வாலா

ஜெய்ப்பூர்: முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளதாக காங். மூத்த தலைவர் தெரிவித்தார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது.


latest tamil news


நேற்று தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறினார் சச்சின் பைலட் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி வந்தார்.

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற இடங்கள் உள்ளது. 107 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 13 சுயேட்சைகளும், ராஷ்டிரிய லோக் தல்லை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் அசோக் கோலட் ஆட்சியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சச்சின் பைலட் தன்னிடம் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறியதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜ்வாலா இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,

பெரும்பான்மையான 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டின் ஆட்சி உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இவர்கள் பா.ஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்துவிட்டனர். இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றுமொரு கூட்டம் நடைபெற உள்ளது.

சச்சின் பைலட் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
14-ஜூலை-202009:53:01 IST Report Abuse
CSCSCS பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் . பெரும்பான்மை இருக்குன்னா எதற்கு விடுதியில் அடைபட்டு தங்கணும் ?
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-ஜூலை-202009:27:35 IST Report Abuse
sundarsvpr இப்பொது காங்கிரஸ் கட்சிக்கு தேவை வேகம் அல்ல விவேகம். தனிப்பட்ட முறையில் மோடி அரசை நாள்தோறும் வசை பாடுவதில் உள்ள வேகம் கட்சியை நடத்திச் செல்வதில் இல்லை. அதாவது கட்சி தலைமையை ஏற்று நடத்திச் செல்கிறேன் என்று கூறும் திறன் ராகுலுக்கு இல்லை. நேரு குடும்பத்தை தவிர வேறு ஒருவர் தலைமை ஏற்று நடத்தினால் பல திறன்பட்ட தலைகள் வெளிவரும். மக்கள் ஆதரவு பெருகும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-ஜூலை-202008:24:56 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Congress is sinking ship because of captain.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X