அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளுடன் அ.ம.மு.க.,வினர் அட்டூழியம்

Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 ரவுடிகளுடன் அ.ம.மு.க.,வினர் அட்டூழியம்

திருப்போரூர் : -'துப்பாக்கியால் சுட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அட்டூழியம் செய்த, அ.ம.மு.க.,வினர் மற்றும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும்' என, அப்பகுதி மக்கள், காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், இதயவர்மன், 46; திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரது தந்தை, லட்சுமிபதி, 70; திருப்போரூர் தி.மு.க., ஒன்றிய குழு முன்னாள் தலைவர். அதே ஊரைச் சேர்ந்தவர், கோவிந்தசாமி; இவரது மகன், குமார், 45; ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அண்ணன், தாண்டவமூர்த்தி, 49. இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சிறுதாவூர் பங்களாவில், தோட்டங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இதனால், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. அ.தி.மு.க.,வில் இருந்த தாண்டவமூர்த்தி, தற்போது, அ.ம.மு.க.,வில், திருப்போரூர் ஒன்றிய அம்மா பேரவை செயலராக உள்ளார்.

இவரும், குமாருடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். எம்.எல்.ஏ., தரப்பினருக்கும், குமார் தரப்பினருக்கும் இடையே, பல ஆண்டுகளாக, சொந்த ஊரில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக, முன் விரோதம் உள்ளது.இந்நிலையில், கோவிலுக்கு அருகில் உள்ள நிலத்தை குமார் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பாதை அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, எம்.எல்.ஏ., தரப்பினரும், ஊர் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவில் நிலத்திற்கு அருகே, எம்.எல்.ஏ.,வின் தந்தை லட்சுமிபதி, ஜூலை, 11 காலை, 11:30 மணிக்கு கால்வாய் அமைக்க முயற்சித்தார். குமார் தரப்பினர், தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது.அரிவாள் வெட்டுமாலையில், குமார் தரப்பினர், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட, ரவுடிகளை அழைத்து சென்று, மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, லட்சுமிபதிக்கு அரிவாள் வெட்டுவிழுந்தது. அந்த நேரத்தில் தான், இதயவர் மன், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அதேபோல, அவரது தந்தையும், நாட்டு துப்பாக்கியால், எதிர் கோஷ்டியினரை சுட்டுள்ளார். இச்சம்பவத்தில், இரு கோஷ்டியினருக்கும் காயம் ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்த, சீனிவாசன் என்பவர், துப்பாக்கிச் சூட்டில் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, சென்னை, மடிப்பாக்கத்தில், மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த இதயவர்மனும், எதிர் தரப்பில், குமார் மற்றும் அவரது தம்பி உட்பட, 12 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஸ்டேஷன் முற்றுகை இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, செங்காடு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர், திருப்போர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களுடன், திருப்போரூர், ஏ.எஸ்.பி., சுந்தரவதனம், சமரச பேச்சு நடத்தினார். அப்போது, கிராமத்தினர் கூறியதாவது: குமார் தரப்பினர், கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். தடுக்க முயன்ற எங்களை, ரவுடிகளை ஏவி விட்டு தாக்க முயன்றனர். அந்த நிலத்தை மீட்க, எம்.எல்.ஏ., போராடி வருகிறார். சம்பவத்தன்று ரவுடிகள், கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டினர். அந்த கும்பலில், அ.ம.மு.க.,வினர் அதிகம் பேர் இருந்தனர். அவர்களில், இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம். மற்ற ரவுடிகள், இரண்டு கத்திகளை போட்டு விட்டு தப்பினர். எம்.எல்.ஏ.,வும், அவரது தந்தையும், தங்களையும், ஊர் மக்களையும், காப்பாற்றுவதற்காகவே, துப்பாக்கியால் சுட்டனர்.

அவர்கள், துப்பாக்கியால் சுடவில்லை என்றால், எங்கள் ஊரில் ரத்த ஆறு ஓடி இருக்கும். வெளியூரில் இருந்து, ரவுடிகளை அழைத்து வந்து, அட்டூழியம் செய்த குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காப்புக்கு சுட்ட, எம்.எல்.ஏ., உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும். எங்கள் ஊரை போர்க்களமாக மாற்றிய ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு கிராமத்தினர் கூறினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும், விரைவில் கைது செய்யப்படுவர் என, ஏ.எஸ்.பி., சுந்தரவதனம் உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.

பூந்தமல்லி சிறையில் எம்.எல்.ஏ., அடைப்பு திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிந்நது, எம்.எல்.ஏ., இதயவர்மன், அவரது தம்பி நிர்மல், 40, வசந்த், 38, திருப்போரூர் ரமேஷ், 42, திருக்கழுக்குன்றம் யுவராஜ், 45, கந்தசாமி, 43, சென்னை, மேடவாக்கம் அமுல்ராஜ், 71, சுதாகர், 38, முத்து, 47, ரமேஷ், 42, சுரேஷ், 42, ஆகிய, 12 பேரை கைது செய்தனர். அவர்களை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, எம்.எல்.ஏ.,வை, பூந்தமல்லி சிறையிலும், மற்றவர்களை, சைதாப்பேட்டை சிறையிலும், அடைத்தனர்.- இந்த மோதலில் தொடர்புடைய குமார் கைது செய்யப்பட்டு, மற்றொரு வழக்கில், செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ., உட்பட, 11 பேருக்கு ஜாமின் கோரி, அதற்கான மனுவை, சீனியர் வழக்கறிஞர் கனகராஜ், 'ஆன்லைன்' வாயிலாக, முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலாவிற்கு நேற்று அனுப்பினார். இம்மனு மீதான விசாரணை, வரும், 15ல் நடைபெறும் என, நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூலை-202016:53:53 IST Report Abuse
Endrum Indian அசிங்கம் மடையர்கள் முரடர்கள் கயவர்கள் இவர்கள் கட்சி தான் அது எவ்வ்ளவு அழகாக இது சொல்கின்றது
Rate this:
Cancel
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
20-ஜூலை-202011:35:56 IST Report Abuse
வல்வில் ஓரி இப்போ என்ன சொல்லுவார்கள்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
20-ஜூலை-202011:26:15 IST Report Abuse
mindum vasantham யார் என்ன சொன்னாலும் என்னமோ இப்போ தமிழகத்திற்கு தேவை வீரியமான ரஜினி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X