'பேஸ்புக்' பயன்படுத்த தடை விதிக்க கூடாது: ராணுவ அதிகாரி மனு

Added : ஜூலை 14, 2020 | |
Advertisement
புதுடில்லி : ராணுவத்தில் பணிபுரிபவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அதிகாரி ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சீனாவை சேர்ந்த மொபைல் செயலி நிறுவனங்கள், தங்கள் பயனாளர்கள் குறித்த தகவல்களை, சீன அரசுக்கு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, 'டிக்டாக்' உள்ளிட்ட, 59

புதுடில்லி : ராணுவத்தில் பணிபுரிபவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அதிகாரி ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சீனாவை சேர்ந்த மொபைல் செயலி நிறுவனங்கள், தங்கள் பயனாளர்கள் குறித்த தகவல்களை, சீன அரசுக்கு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, 'டிக்டாக்' உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது.இதற்கிடையே, நம் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுடன், சமூக ஊடகங்களில் நட்பாக பழகி, எதிரி நாட்டை சேரந்தவர்கள், பல தகவல்களை திருடுவதாக, பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட, 89 சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு, சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.

இதற்கான உத்தரவை, ராணுவ உளவுத்துறை இயக்குனரகம் வெளியிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஜம்மு -- காஷ்மீரில் பணியாற்றும், லெப்டினன்ட் கர்னல், பி.கே.சவுத்ரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.அதன் விபரம்:குடும்பத்தை பிரிந்து, பல்லாயிரம் கி.மீ., துாரத்தில், தனிமையில், ஆபத்து நிறைந்த பணியை மேற்கொள்ளும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தகவல் பரிமாறி கொள்ள, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளன.அதற்கு தடை விதிப்பது, வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். எனவே, இந்த உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கேவியட் மனுமத்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன மொபைல் செயலி நிறுவனங்கள், அந்த தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவ்வாறு மனுதாக்கல் செய்தால், அரசு தரப்பு விளக்கத்தை கேட்காமல், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு தரப்பில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணம் கூறப்படவில்லை.-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X