அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இரட்டிப்பு!

Added : ஜூலை 14, 2020 | |
Advertisement
திருப்பூர், ஜூலை 14-அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை மறுசீரமைப்பு செய்யவேண்டும்; அந்நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும் என, மத்திய அரசுக்கு, ஏ.இ.பி.சி., கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜவுளி, வர்த்தகத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா தொற்று

திருப்பூர், ஜூலை 14-அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை மறுசீரமைப்பு செய்யவேண்டும்; அந்நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும் என, மத்திய அரசுக்கு, ஏ.இ.பி.சி., கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜவுளி, வர்த்தகத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா தொற்று பரவிவரும், நெருக்கடியான சூழலில், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. நாடு விரைவில் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பி, தற்சார்பு இந்தியாவாக மாறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.


இந்திய ஆடை ஏற்றுமதிக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து மிக முக்கியமான சந்தை. வங்கதேசம், கம்போடியா, இலங்கை உள்ளிட்ட போட்டி நாடுகளைவிட, ஐரோப்பிய சந்தையில், இந்திய ஆடைகளுக்கு, 9.6 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.சமீபத்தில், வியட்நாம் - ஐரோப்பா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.


வியட்நாமுடன் போட்டியிட, இந்தியா - ஐரோப்பா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது மிகவும் அவசியமானதாக உள்ளது.ஐரோப்பாவுடன் ஏற்படுத்தும் ஒப்பந்தம், இங்கிலாந்துக்கு இணையான அல்லது அதைவிட சிறந்ததாக இருக்கவேண்டும். அதேபோல், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கடனா நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.அமெரிக்காவின் சராசரி வரி விகிதம், 12.5 சதவீதம்; செயற்கை இழை ஆடைகள் போன்ற நமது நாட்டில் ஊக்கப்படுத்தப்படும் சில மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களுக்கு, அந்நாட்டில், 28 சதவீதம் என்கிற உச்ச வரி விதிக்கப்படுகிறது.இந்தியாவின் ஏற்றுமதியில், 27 சதவீதம் அமெரிக்க சந்தையை சார்ந்துள்ளது. இந்தியாவுக்கு, கடனா மிகப்பெரிய சந்தையாக இருந்தது. போட்டி நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டதால், தற்போது கனடாஉடனான வர்த்தகத்தை இந்தியா இழந்துள்ளது.


கனடா, ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், இழந்த வர்த்தகத்தை மிக எளிதாக மீட்டெடுத்துவிடலாம்.ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை, மறு ஆய்வு செய்யவேண்டும்.ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்திய ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகிவிடும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X