ஸ்வப்னாவுக்கு தொற்று இல்லை: என்.ஐ.ஏ., விசாரிக்க அனுமதி

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஸ்வப்னா, தங்கக் கடத்தில் வழக்கு,சந்தீப் நாயர் , 'கொரோனா' வைரஸ் தொற்று, இல்லை , என்.ஐ.ஏ.

கொச்சி : கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள, தங்கக் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோருக்கு, 'கொரோனா' வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை, வரும், 21ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் கடத்த முயன்றது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


சரித் கைது:

இது தொடர்பாக, துாதரகத்தில் பணியாற்றிய, பி.எஸ். சரித் கைது செய்யப்பட்டார்.துாதரகத்தில் முன்பு பணியாற்றிய, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஸ்வப்னா பணியாற்றி வந்தார். தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, என்.ஐ.ஏ., சார்பில், நேற்று முன்தினமே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற காவல்ஆனால், இருவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும்வரை, நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.பரிசோதனையில் அவர்களுக்கு, கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. அதையடுத்து, இருவரையும், வரும், 21ம் தேதி வரை, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.


நம்பிக்கையில்லா தீர்மானம்:

தங்கக் கடத்தல் விவகாரத்தில், முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பென்னி பெஹனான் தலைமையில், நேற்று நடந்தது. பினராயி விஜயன் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை, சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சபாநாயகர், பி. ஸ்ரீராமகிருஷ்ணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர் பதவி விலகக் கோரியும் சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜூலை-202008:57:33 IST Report Abuse
Sampath Kumar வேற தோற்று இருக்க போகுது பார்த்து
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
14-ஜூலை-202023:30:52 IST Report Abuse
Sundararaman Iyer another Nira Radiia case.
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-202022:19:05 IST Report Abuse
Mannai Radha Krishnan லால் பஹதூர் சாஸ்திரி, மொரார்ஜி...போல் வீரம், தீரம், நேர்மை உள்ளவராக இருந்தால், இந்நேரம் resign செய்து இருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X