கொரோனாவால் மிக மிக மோசமான பேரழிவு ஏற்படும்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Coronavirus pandemic, covid 19, WHO, coronavirus, கொரோனா,மிக மிக மோசமான பேரழிவு

ஜெனிவா: சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கா விட்டால் கொரோனா வைரஸ் மிக மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:


latest tamil news



ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Saravanan - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202013:23:24 IST Report Abuse
S Saravanan ஆமா, தலைவர் Deadrose (Rosekiller) what a name > டெட்ரோஸ் கொல்லிட்டாறு, ஒன்ன பாத்தாலே கடுப்பா வருது, இந்த மோசமான அழிவுக்கு நீயும் முக்கிய காரணம்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202012:57:26 IST Report Abuse
Tamilan இதற்க்கு மேலுமா ? இனியுமா ? இப்படி எச்சரிக்கை மட்டும் கொடுத்துக்கொண்டு இருந்தால் எப்படி ? .அதை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் ?. எந்த கட்டுப்பாடுகளும் , மருந்தும் மாத்திரையும் இல்லாத ஒரு தீர்வு தேவை . ஏனெனில் , கட்டுப்பாடுகளால் கோடிக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டுவிட்டது . மருந்து மாத்திரை கண்டுபிடிக்க நிறைய நாட்கள் ஆகலாம் . மக்கள் பலமாதங்களாக வெளியில் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. தொழில் நிறுவனங்களால் அல்லது, பொருளாதார சந்தையில் உள்ளவர்களால் தினமும் கொள்ளையடிக்காமல் இருக்க முடியாது , என் எத்தனையோ இன்னல்கள் . இதெற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும் .
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202012:37:36 IST Report Abuse
Chinnappa Pothiraj வைரஸைப் பரப்பி உலகநாடுகளை கதிகலநங்க வைத்த நாட்டை தயவுதாட்சனை இன்றி மிக மிக கடுமையான கொலைக்குற்றத்திற்கான தண்டணையும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் இது பொருந்தும். மக்கள் குலத்தின் மகாபாவிகள். வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X