கொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிப்பு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சீனாவில் 27 மாகாணங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீனாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



latest tamil news



28,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஜியாங்க்சி மாகாணத்தில் பெய்து வரும் மழையால் மிகத்தீவிர வெள்ள அபாய அவசர நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 1998ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக அளவாகும். 33 நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலை இப்போதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.


latest tamil news



ஹூபேய் மாகாணத்திலும் இதுவரை இல்லாத அளவு திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாங்க்ஷி நதியில் ஹன்கோவ் நிலையத்தில் வெள்ளத்தின் அளவு 28.44 மீட்டராக உள்ளது. இது 2016ம் ஆண்டு அளவை விட மிக அதிகமாகும். மேலும் சாங்க்குவிங், அன்ஹூய், ஜியாங்க்சி, ஹூபேய் மாகாணங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நிலைமை சிக்கலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
14-ஜூலை-202013:32:02 IST Report Abuse
ravi அப்பாவி மக்களின் சாபம் உங்களை சும்மா விடாதுடா....
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
14-ஜூலை-202010:42:03 IST Report Abuse
Rajesh அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் ......
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
14-ஜூலை-202010:37:45 IST Report Abuse
மூல பத்திரம் கர்மா, முற்பகல் செயின் பிற்பகல் விளையும். இறைவா அப்படியே உங்கள் கவனத்தை பாக் பக்கமும் திருப்புவீர்களாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X