பொது செய்தி

இந்தியா

இன்று முதல் பெங்களூருவில் முழு ஊரடங்கு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
covid 19, coronavirus, bengaluru, lockdown, இன்று முதல் பெங்களூரு,முழு ஊரடங்கு

பெங்களூரு: கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது. 41,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 759 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




இம்மாநிலத்தில் பெங்களூருவில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. பெங்களூருவில் 15,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைள் நடந்து வருகின்றன. இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.


latest tamil news




எனவேகொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த இன்று முதல் (ஜூலை 14-) ஜூலை 21--ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா. இதன்படி இன்று ஜூலை இரவு 8 மணி முதல் ஜூலை 22-ந் தேதி அதிகாலை 5 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த ஊரடங்கின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கான கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பெங்களூருவாசிகள் நேற்று கிடைத்த வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
14-ஜூலை-202012:00:28 IST Report Abuse
NicoleThomson இன்று இல்லை நாளை (14) முதல்
Rate this:
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
14-ஜூலை-202010:26:16 IST Report Abuse
Vinoth சென்னையில் ஆட்சியாளர்கள் செய்த தவறை பெங்களூரிலும் செய்கிறார்கள். சென்னையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஊரடங்கு ஆரம்பிப்பதற்குமுன் வெளிமாவட்டத்திற்கு செல்பவர்களை சாதாரணமாக அனுமதித்துவிட்டார்கள். விளைவு... சென்னையில் குறைகிறது ஆனால் பிற மாவட்டங்களை எகிறுகிறது... உபாயம் சென்னை ரிட்டர்ன்ஸ் ...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஜூலை-202009:17:17 IST Report Abuse
S. Narayanan பெங்களூரை விட்டு வெளியே போனா மறுபடியும் திரும்பி வந்துதானே ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X