இந்திய செய்தி சேனல் மீதான தடை:நேபாளம் ஒரளவிற்கு நீக்கம்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
காத்மாண்டு: இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரளவிற்கு நீக்கப்பட்டுள்ளதாக நேபாள டிவி ஆபரேட்டர்கள் சங்க துணைதலைவர் கூறி உள்ளார்.இது குறித்து கூறப்படுவதாவது: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த மே மாதம் 8 ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன் லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார். இதனையடுத்து

காத்மாண்டு: இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரளவிற்கு நீக்கப்பட்டுள்ளதாக நேபாள டிவி ஆபரேட்டர்கள் சங்க துணைதலைவர் கூறி உள்ளார்.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த மே மாதம் 8 ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன் லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார். இதனையடுத்து இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.

தொடர்ந்து நேபாளம் தனது அரசியல் வரை படத்தை அரசியல் அமைப்பு மூலம் திருத்தியது. அதில் இந்திய எல்லைப்பகுதிகளான லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் வரைபடம்.இருந்ததால் இந்தியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து நேபாள பிரதமர் சர்மா ஓலிக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் பிரதமர் பிரச்சந்தா மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்திய விரோத போக்குகள் அரசியல் ரீதியாக சரியல்ல எனவும், ராஜதந்திர ரீதியில் பொருத்தமானவை அல்ல என கூறினர்.


latest tamil newsஇதனிடையே கடந்த வியாழக்கிழமை நேபாள நாட்டின் கேபிள் டி.வி. ஆபரரேட்டர்கள் நேபாளத்தின் உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டியதோடு மத்தியஅரசின் சேனலான தூர்தர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து செய்தி சேனல்களை ஒளிரப்புவதை தடை செய்தது. இதனை நேபாளத்தின் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் வரவேற்று நன்றி தெரிவித்தது.

இந்நிலையில் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.வி. ,ஆபரேட்டர்கள் சங்கத்தின் துணை தலைவர் துர்பா சர்மா ஆட்சேபகரமான செய்திகளை வெளியிட்ட ஒரு சில சேனல்களை தவிர பிற செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஜூலை-202022:38:00 IST Report Abuse
Loganathan Kuttuva பல தேச விரோத சானல்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-ஜூலை-202011:33:06 IST Report Abuse
மலரின் மகள் தன்னிறைவு பெறுவதற்கு வழியற்ற தேசத்தில் அதுவும் இந்தியாவின் உதவியாலேயே பிரச்சினையில்லாமல் வெளிநாடுகளின் அச்சுறுத்தல்கள் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டியவர்கள் இப்போது பிரச்சினைகளை பெரிதாக்கி கொண்டே செல்கிறார்கள். சீனர்களால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும் அதனால் பெரியளவில் வளரலாம் என்று தப்பி கணக்கு போடுகிறார்கள். சீனர்கள் ஒரு சில அரசியல் துரோகிகளை ஏமாற்றி அவர்களுக்கு மட்டும் பெரும்பணஉதவி செய்து தேசத்தை கபளீகரம் செய்யவே முயல்வார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்த பல தேசங்களை உற்று நோக்கி அறியலாம். உதாரணமாக சொல்வதென்றால் இலங்கையை கூறலாம். கொழும்பு நகரத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் நமது சென்னையில் இருக்கும் ஓட்டல்களை விட மிகப்பிரமாண்டதாக இருக்கும். அந்த ஓட்டலில் பங்கு தாற்றார்களாக பல அரசியல் பெரும்புள்ளிகள் உண்டு. சீனர்கள் அமைத்து தந்த சாலைகள் மிக பெரியளவில் இருக்கிறது அங்கே, இலங்கை மக்களுக்கு அதனால் முதலில் பெரிய சந்தோசம் தங்களது தேசத்தில் மிகப்பிரமாண்டமான ஓட்டல்களும் சாலைகளும் இருப்பதாக. பின்னாளில் அந்த சாலைகளை பெரும்பாலான இலங்கை மக்கள் பயன்படுத்த இயலாதவகையில் டோல் சார்ஜ் இருக்கிறது. அவர்களுக்கு அது மிகவும் கூடுதல் செலவாக தெரிகிறது. கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையம் செல்வதற்கு முக்கிய சாலையில் செல்வதற்கு அறுநூறு ருபாய் டோல் தரவேண்டும் என்பது அவர்களுக்கு இயலாத நிலை, ஆகையால் அந்த சாலையை ஒட்டிய சாதாரண சாலையில் டோல் இல்லாமல் மூன்று நான்கு மணிநேர பயணம் செல்லும் நிலை இப்போது, முன்னர் அவர்கள் வெறும் இரண்டு மணி நேரத்தில் அதே சாலையில் சென்றார்கள் இப்போது புதிய சாலை பெரும்பகுதியை ஆக்கிரமித்து டோல் சார்ஜ் அதிகமானதால் மீண்டும் நான்கு மணி நேர பயணத்தில் பழைய சாலையில் கூடுதல் ட்ராபிக்கில் சங்கடம் கொள்கிறார்கள். இதற்கு சீனர்களின் சாலை அமைக்கப்படாமலேயே இருந்திருக்கலாம் என்கிறார்கள் அங்கே. நட்சத்திர ஓட்டல்கள் அங்குள்ள பணக்காரர்களாலேயே பயன்படுத்த முடியாதா அளவில் தான் இருக்கிறது. நம்மூர் பணத்தில் இருபதியாயிரம் ருபாய் ஒரு நாளைக்கு என்றவகையில் இருக்கிறது.
Rate this:
Cancel
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202009:10:24 IST Report Abuse
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) இந்தியாவை குறை கூறி கொண்டு சீனாவிற்கு துதி பாடி கொண்டு இருக்கும் லிபரல் சேனல் மட்டும் ஒளிபரப்ப அவிங்க சீனா முதலாளி அனுமதி கொடுத்து இருப்பான்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X