இந்திய செய்தி சேனல் மீதான தடை:நேபாளம் ஒரளவிற்கு நீக்கம்| Nepal partially lifts ban on Indian private news channels | Dinamalar

இந்திய செய்தி சேனல் மீதான தடை:நேபாளம் ஒரளவிற்கு நீக்கம்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (3)
Share
காத்மாண்டு: இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரளவிற்கு நீக்கப்பட்டுள்ளதாக நேபாள டிவி ஆபரேட்டர்கள் சங்க துணைதலைவர் கூறி உள்ளார்.இது குறித்து கூறப்படுவதாவது: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த மே மாதம் 8 ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன் லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார். இதனையடுத்து

காத்மாண்டு: இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரளவிற்கு நீக்கப்பட்டுள்ளதாக நேபாள டிவி ஆபரேட்டர்கள் சங்க துணைதலைவர் கூறி உள்ளார்.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த மே மாதம் 8 ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன் லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார். இதனையடுத்து இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.

தொடர்ந்து நேபாளம் தனது அரசியல் வரை படத்தை அரசியல் அமைப்பு மூலம் திருத்தியது. அதில் இந்திய எல்லைப்பகுதிகளான லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் வரைபடம்.இருந்ததால் இந்தியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து நேபாள பிரதமர் சர்மா ஓலிக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் பிரதமர் பிரச்சந்தா மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்திய விரோத போக்குகள் அரசியல் ரீதியாக சரியல்ல எனவும், ராஜதந்திர ரீதியில் பொருத்தமானவை அல்ல என கூறினர்.


latest tamil newsஇதனிடையே கடந்த வியாழக்கிழமை நேபாள நாட்டின் கேபிள் டி.வி. ஆபரரேட்டர்கள் நேபாளத்தின் உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டியதோடு மத்தியஅரசின் சேனலான தூர்தர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து செய்தி சேனல்களை ஒளிரப்புவதை தடை செய்தது. இதனை நேபாளத்தின் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் வரவேற்று நன்றி தெரிவித்தது.

இந்நிலையில் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.வி. ,ஆபரேட்டர்கள் சங்கத்தின் துணை தலைவர் துர்பா சர்மா ஆட்சேபகரமான செய்திகளை வெளியிட்ட ஒரு சில சேனல்களை தவிர பிற செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X