பொது செய்தி

இந்தியா

ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் செப்.,-க்கு ஒத்திவைப்பு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020
Share
Advertisement

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் செப்.,வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலமுதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பொது நுழைவு தேர்வுகள்(சி.இ.டி) நிலையை மதிப்பீடு செய்தார். மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக சிஇடி -யை செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்.


latest tamil news



மேலும் கொரோனா தொற்று இயல்புநிலைக்கு வந்த பின்னர் கல்லூரியின் இளங்கலை முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் . அதுவரையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க முயற்சிக்கப்படுகிறது. விரைவில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.

மாணவர்களின் நலனுக்காக சிஇடி மாதிரி சோதனகள் நடத்தப்படும் இவ்வாறு அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X