சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கருப்பர் கூட்டம் 'யூ டியூப்' சேனலுக்கு தடை; போலீசில் பா.ஜ., புகார்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement

சென்னை: 'ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, 'வீடியோ' வெளியிட்டு வரும், கருப்பர் கூட்டம் என்ற, 'யூ டியூப் சேனலை' தடை செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



latest tamil news


தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர், 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யூ டியூப் சேனல்' நடத்தி வருகின்றனர்.அதில், ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.

ஹிந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை, கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 'கருப்பர் கூட்டம், யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும்' என, ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் செந்தில் என்பவரும் நேற்று புகார் அளித்துள்ளார்.


5 பிரிவுகளில் வழக்கு


பா.ஜ., புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 153(ஏ)(1), 295(பி), (505(1), (பி), 505(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




கடவுளை இழிவுபடுத்துவதா?

'ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி பிரசாரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கடவுள் மறுப்பு என்ற பெயரில், ஹிந்து மத நம்பிக்கைகளை, தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், 'கறுப்பர் கூட்டம்' என்ற, 'யூ டியூப்' பதிவு ஒன்றில், ஒருவர், முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துகளை பரப்பியுள்ளார். இதை, ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீதும், அதற்கு பின்னணியில் இயங்கும் நபரையும் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
16-ஜூலை-202014:04:12 IST Report Abuse
RaajaRaja Cholan இதில் வரும் காசில் தான் வயறு வளர்ப்பவன் போல் உள்ளது
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜூலை-202008:54:07 IST Report Abuse
Sampath Kumar கறுப்பர் கூட்டம் இல்லை அற்பர் கூட்டம் தில் இருந்தால் பொது மேடையில் வந்து பேசு ஏங்கே நம்ம சீமாரை காணூம் ??
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
14-ஜூலை-202019:03:04 IST Report Abuse
K.GOPINATHRAJA ஸ்டாலினுக்கோ அவரது மகனுக்கோ தைரியம் இருந்தால் எந்த மதத்தையும் இழிவு செய்ய கூடாது என்று ஒரு அறிக்கை விட சொல்லுங்கள் பார்ப்போம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X