அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Tamil Nadu Chief Election Officer Sathyabrata Sahoo, tamil nady by poll, tamil nadu, tn news, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல்


சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், திருவொற்றியூர், எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி, குடியாத்தம், எம்.எல்.ஏ., காத்தவராயன், சேப்பாக்கம், எம்.எல்.ஏ., அன்பழகன் ஆகியோர் மறைவு காரணமாக, மூன்று சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன.


latest tamil news




திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியாக இருப்பதாக, மார்ச், 1ம் தேதியும், சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதி காலியாகஇருப்பதாக, கடந்த மாதமும் அறிவிக்கப்பட்டது.அடுத்த ஆண்டு, மே மாதம், சட்ட சபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால், மூன்று தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியதாவது:அனைத்து மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

தேர்தல் நடத்த, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இது நாள் வரை, தேர்தல் தொடர்பாக, எந்த அறிவிப்பும் வரவில்லை.கடந்த வாரம், தேர்தல் ஆணையம் சார்பில், காணொலி காட்சி வழியாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்து, தயார் நிலையில் வைத்திருக்கும்படி கூறினர். அதன் அடிப்படையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு, கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஜூலை-202012:43:41 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் இப்பொழுது தேவையா???
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
14-ஜூலை-202011:57:15 IST Report Abuse
Rengaraj என்னத்துக்கு தேர்தல்? புதிய மக்கள் பிரதிநிதி என்ன செய்துவிடப் போகிறார்? கொரானாவை கட்டுக்குள் வைப்பதற்கு தற்போது இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்து விட்டார்கள்? ஒன்றும் வேண்டாம். ஏற்கனேவே கஜானாவில் காசு இல்லை என்று புலம்புகிறார்கள். இது வேறா? தேர்தல் அரசுக்கு வேண்டாத வேலை மற்றும் அனாவசிய செலவு. தேவையில்லை தேர்தல் எட்டுமாதத்தில் பொது தேர்தல் வரப்போகிறது. அப்போது பார்க்கலாம். இன்னும் ஒரு வருஷத்துக்கு எதுவுமே வேண்டாம்., மக்களின் வரிப்பணம் விரயம் செய்ய வேண்டாம் கொரோனா இருப்பதால் அதிகாரிகள் மட்டுமே போதும். மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை.
Rate this:
Cancel
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
14-ஜூலை-202010:27:18 IST Report Abuse
Kudandhaiyaar பிளஸ் டூ தேர்வு முடிவு வருவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுங்கள். இப்ப இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியும் ரெண்டாயிரம் கொடுத்தால் செலவுக்கு வசதியா இருக்கும். கொஞ்சம் கருணை வையுங்கள். எப்படியும் இரண்டு கட்சிகளில் ஒன்றை தான் தேர்வு செய்ய போகிறோம். செலவுக்கு ஆகுமேனு பார்த்தேன். முடிந்தால் முழு தமிழ்நாட்டுக்கும் வைத்தால் நாடே பலன் பெரும். நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X