முதல்வர் நாற்காலியில் அமர சச்சின் பைலட் திட்டம்?

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட், பா.ஜ., ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் அமர திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.



latest tamil news



காங்., மேலிடம், தனக்கு முதல்வர் பதவி கொடுக்காததால், அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறார், சச்சின் பைலட். மார்ச்சிலிருந்து, பா.ஜ., தலைவர்களுடன், இது குறித்து ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, காய் நகர்த்தி வருகிறார். பா.ஜ.,வில் இணைவது, அவரது திட்டமல்ல. அதற்குப் பதிலாக, பா.ஜ., ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே, அவரது திட்டம். ஆனால் இதற்கு, பா.ஜ., தலைவர்கள் தயங்கி வருகின்றனர்.


latest tamil news



ஆனாலும் தொடர்ந்து, பா.ஜ., தலைவர்களுடன், அவர் பேச்சு நடத்தி வருகிறார். இதற்காக டில்லியில், தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். 'பா.ஜ.,வில் இணைய சம்மதித்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம்' என, பா.ஜ., தலைவர்கள் தரப்பில், சச்சின் பைலட்டிடம் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
14-ஜூலை-202016:06:09 IST Report Abuse
Raj பதவி ஆசை யாரை விட்டது .கட்சித்தாவல் சட்டம் கடுமையாக்க படவேண்டும். நாளை இது பிஜேபி கும் ஏற்படும்
Rate this:
Cancel
14-ஜூலை-202012:00:10 IST Report Abuse
chandran, pudhucherry இவனுக்கு பதவி ஆசை ஆனா பாருங்க எங்க சுடலை இந்த சின்ன வயசுலகூட அதுக்கெல்லாம் ஆசை படலை.
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
14-ஜூலை-202011:38:58 IST Report Abuse
Subbanarasu Divakaran சில வீடுகளில் கூட முதியோர்கள் ஒடுங்க நினைப்பதேயில்லை. அரசியல் கட்சியான காங்கிரஸ் இல் இளைஞர்கள் மேலே வர வேண்டாமா?
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
14-ஜூலை-202014:34:25 IST Report Abuse
வல்வில் ஓரிநாளை நீயும் பெரிசு ஆவ அப்போ தெறியும் ஒடுங்கிரிய எகிறுகிறாயா என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X