வானத்தை நோக்கி சுட்டால் பரவாயில்லையாம்: திமுக நிர்வாகி சொல்கிறார்| DMK MP RS Bharti speaks on gun firing involving TN MLA | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வானத்தை நோக்கி சுட்டால் பரவாயில்லையாம்: திமுக நிர்வாகி சொல்கிறார்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (80)
Share
சென்னை: தற்காப்புக்காக வானத்தை நோக்கி சுட்டதை திசை திருப்ப முயற்சிப்பதாக திமுக., அமைப்பு செயலரும், எம்பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக.,வில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக கூறினார். இதற்கு திமுக அமைப்புச்
DMK, RS Bharathi, Gun Shoot, திமுக, ஆர்எஸ் பாரதி, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு

சென்னை: தற்காப்புக்காக வானத்தை நோக்கி சுட்டதை திசை திருப்ப முயற்சிப்பதாக திமுக., அமைப்பு செயலரும், எம்பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக.,வில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக கூறினார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக.,வை வன்முறை கட்சி என கூறிய அமைச்சருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.மீனவர்களின் உயிர்காக்கும் வாக்கி டாக்கிகள் வாங்கியதில் ஊழல் செய்து, கொள்ளையடித்து, ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமாருக்கு தி.மு.க.,வைப் பற்றி விமர்சிக்க அடிப்படைத் தகுதியும் இல்லை. தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலம் ஒரு தனியார் நிலத்திற்காகத் தாரைவார்க்கப்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை அப்பகுதி மக்களுக்கும், மக்களின் கோரிக்கைக்கு உதவிட வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கும் இருக்கிறது.

குற்றச் சம்பவத்திற்கு முதல் காரணம் யார் என்பதை விசாரித்துக் கண்டுபிடிப்பதுதான் புலனாய்வு அதிகாரியின் வேலை. அந்த வேலையை காவல்துறை அதிகாரிகள் செய்தால் அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் சிக்கி விடுவார் என்பதற்காகவே, தி.மு.க. எம்.எல்.ஏ. மீது மட்டுமே பொய் வழக்குப் போட வேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்துடன் விசாரணை துவங்கியவுடனேயே அமைச்சர் ஜெயக்குமார் 'வழக்கின் போக்கை' திசை திருப்பும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.


latest tamil news


அமைச்சர் ஜெயக்குமாரே "நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். அவர் வீடுவரை ரவுடிகள் விரட்டி வந்தால் தற்காப்பிற்கு வானத்தை நோக்கிச் சுடுவாரா? மாட்டாரா? அப்படித்தான் அன்றைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ., வீட்டிலும் நடைபெற்றது. ரவுடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.,வின் தந்தை சுட்டதை திசைதிருப்பி, ஏதோ நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் பேசுவதும், கோவில் நிலத்தைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தை ஏதோ எம்.எல்.ஏ., தனது சொந்த நலனுக்காக நடத்திய போராட்டம் போல் சித்தரிப்பதும் விபரீதமான உள்நோக்கத்தின் வெளிப்பாடு. திமுக எம்.எல்.ஏ., சட்டத்தின் முன் நின்று நியாயத்தை நிலைநாட்டுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X