அவன்தான் மனிதன்...

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிதிலமடைந்த குடிசைகள்திறந்துகிடக்கும் கால்வாய்,அதில் பண்ணையைப் போல பெருகிக்கிடக்கும் கொசுக்கள்சுற்றுச்சுழல் சுகாதாரம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலை இதுதான் கிழக்கு டெல்லியின் உள்ள ஒய் கே ஜக்கி முகாமின் நிலை.உ,பி.,மாநிலத்தில் இருந்து டில்லிக்கு பிழைப்பு தேடி வந்த 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இங்குதான் தங்கியுள்ளனர்.வீட்டு வேலை,சமையல்
latest tamil news


சிதிலமடைந்த குடிசைகள்

திறந்துகிடக்கும் கால்வாய்,

அதில் பண்ணையைப் போல பெருகிக்கிடக்கும் கொசுக்கள்

சுற்றுச்சுழல் சுகாதாரம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலை


latest tamil news
இதுதான் கிழக்கு டெல்லியின் உள்ள ஒய் கே ஜக்கி முகாமின் நிலை.உ,பி.,மாநிலத்தில் இருந்து டில்லிக்கு பிழைப்பு தேடி வந்த 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இங்குதான் தங்கியுள்ளனர்.வீட்டு வேலை,சமையல் வேலை,கூலி வேலை என்று அன்றாடம் வேலைக்கு சென்று வரும் வருமானத்தில் வாழும் பாவப்பட்ட ஏழை மக்கள்.


latest tamil newsஇந்த மக்களின் குழந்தைகளுக்கு சந்தோஷம் மட்டுமல்ல பள்ளிகளும் கூட துாரம்தான்.இதன் காரணமாக நிறையக் குழந்தைகள் பள்ளிக்கு சென்றதே இல்லை சில குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து செல்லமுடியவில்லை இங்கே பத்தாம் வகுப்பு வரை படித்த குழந்தைகள் அதிசயப்பிறவிகள்தான்.

பிள்ளைகள் படிப்பு இப்படி பழாகிறதே என்று குழந்தைகளின் பெற்றோர்கள் உள்பட இங்குள்ள யாரும் கவலைப்பட்டதும் கிடையாது இவர்களில் ஒரே ஒரு ஜீவன் மட்டும் விதிவிலக்கு.

அந்த ஜீவனுக்கு பெயர் சத்யேந்திரபால்

23 வயது இளைஞர், படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக பிஎஸ்சி வரை படித்துவிட்டார் யுபிஎஸ்சி தேர்வு எழுதி அரசு அதிகாரியாக வரவேண்டும் என்பதற்காக படித்துக் கொண்டு இருக்கிறார்.இங்குள்ள குடிசைகளின் ஒன்றில்தான் வசிக்கிறார்.

நமது குடிசைப்பகுதி குழந்தைகள் இப்படி படிக்காமல் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு இங்கு பாலம் கட்டுவதற்காக போடப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்பை வகுப்பறையாக மாற்றி பாடம் நடத்த ஆரம்பித்தார்.

முதலில் இரண்டு பிள்ளைகள் மட்டுமே படிக்க வந்தனர் இவர் பாசத்துடனும் அக்கறையுடனும் பாடம் நடத்தியதை அடுத்து மாணவர்களின் எண்ணிக்கை முன்னுாறை தொட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் உதவி செய்ததன் காரணமாக வகுப்பறை,பிளாக் போர்டு,நோட்டு புத்தகம் எழுத மேசை உட்கார பெஞ்ச் கிடைத்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக பாடம் நடத்திவருகிறார் காலையில் மூன்று மணி நேரமும் மாலையில் மூன்று மணி நேரமும் வகுப்பு நடக்கும் இது ஒரு ட்யூசன் வகுப்பு போலத்தான் வகுப்பு வாரியாக பிரித்து பாடம் நடத்துவார் படிப்பில் ஆர்வம் ஏற்பட்ட குழந்தைகள் பலர் இப்போது பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர் பள்ளியில் புரியாத பாடங்களை இவர் மூலமாக தெரிந்து கொள்வர்.

யுபிஎஸ்சி தேர்வுக்கு தயராகிக் கொண்டு இருப்பதால் பால் வேலைக்கு செல்வதில்லை தனது படிப்பு நேரம் போக மீதநேரம் முழுவதையும் இங்குள்ள குழந்தைகளின் படிப்பிற்கே செலவிடுகிறார் குழந்தைகளின் பெற்றோர் கொடுக்கும் சிறு அன்பளிப்பை சன்மானமாக ஏற்று தனது செலவிற்கு வைத்துக்கொள்கிறார்.

கொரோனா காரணமாக பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது ஆன் லைனின் படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லாத இங்குள்ள குழந்தைகள் எப்பாடு பட்டாவது படித்தால்தான் பொதுத்தேர்வில் போட்டியிடமுடியும் ஆன்லைன் எங்களுக்கு இல்லை என்று காரணம் சொன்னால் மார்க் கிடைக்காது.

இதை உணர்ந்த பால் இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விசேடமாக வகுப்பு எடுத்து வருகிறார் ,மாணவர்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளிவிட்டு வகுப்பறையில் பாடம் படிக்கின்றனர்.

கல்வியின் அருமை எனக்கு தெரியும் கல்வி மட்டுமே இவர்களை உயர்த்தும் ஆகவே எப்பாடு பட்டாவது இவர்களை படிக்கவைப்பேன் அதுதான் எனது லட்சியம் எனும் சத்யேந்திரபால் மேற்கொண்டு பேச நேரமில்லாமல் பாடம் நடத்தும் இடத்திற்கு விரைகிறார்.

-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakkrapani - Vellore,இந்தியா
16-ஜூலை-202008:32:15 IST Report Abuse
chakkrapani சத்யேந்திரபால் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் . பூரண ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
prem TRUTH - Madurai ,இந்தியா
15-ஜூலை-202013:04:57 IST Report Abuse
prem  TRUTH இந்த தனி ஒருவன் சமுதாயத்தின் தூண் ... இப்படிப்பட்ட மாமனிதர்கள் சமூகத்தின் கண்ணாக இருக்கிறார்கள்.... இவர்கள் மென்மேலும் விளங்கி சமூகம் தழைக்க ஈசன் அருள்வாராக .... மங்களம் உண்டாகட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X