மக்கள் தொகையில் 2027ல் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஜெனிவா: இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐநா., கணித்துள்ளது.ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை, 1989ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கத் தொடங்கியது. உலக மக்கள் தொகை 5 பில்லியனை எட்டிய நாளான 1987 ஜூலை 11ம் தேதியை நினைவுக்கூறும் வகையில்
india, china, india population, world population day, இந்தியா, மக்கள்தொகை, முதலிடம், சீனா, ஐநா

ஜெனிவா: இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐநா., கணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை, 1989ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கத் தொடங்கியது. உலக மக்கள் தொகை 5 பில்லியனை எட்டிய நாளான 1987 ஜூலை 11ம் தேதியை நினைவுக்கூறும் வகையில் தேதி தேர்வு செய்யப்பட்டது. அடுத்த 33 ஆண்டுகளில் அதாவது 2020ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளது.


latest tamil news


இது 2050ம் ஆண்டு 970 கோடியையும், 2100ல் 1,100 கோடியையும் எட்டும் என ஐநா., கணித்துள்ளது. உலக நிலப்பரப்பில் வெறும் 2 சதவீத அளவை மட்டுமே கொண்டுள்ள இந்தியா தற்போதைய மக்கள் தொகையில் 18 சதவீதத்தை (139 கோடி) கொண்டுள்ளது. சீனா 19 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. இதே நிலை செல்லும்பட்சத்தில், 2027-ம் ஆண்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத்தள்ளி மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-ஜூலை-202018:06:16 IST Report Abuse
skv srinivasankrishnaveni அம்மாமுங்கோ சின்னக்குழந்தைகளையும் கர்ப்பம் ஆக்குறானுக
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஜூலை-202019:09:10 IST Report Abuse
S. Narayanan அப்போ கொரோனாவும் அதிகமாகும்.
Rate this:
Cancel
S Saravanan - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202016:34:40 IST Report Abuse
S Saravanan No chance because till corona is going, population now in china is 144million corona death is 4634 and india 138million corona death is 23779 so corona when stop then will know as per today situation and before corona completion even 2050 china and UN never give standard information they can change their statistic result by the end of each incident such as corona
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X