பொது செய்தி

இந்தியா

கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த துணை ஆட்சியர் மரணம்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
WestBengal, Bureaucrat, Dies, CoronaVirus, மேற்குவங்கம், கொரோனா வைரஸ், துணை ஆட்சியர், மரணம், பலி

கோல்கட்டா: கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி பாராட்டுக்களை பெற்ற மேற்கு வங்க துணை ஆட்சியர் தேவதத்தா ராய் (38) கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சந்தன்நகர் கோட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் 38 வயதாகும் தேவதத்தா ராய். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஹூக்ளிக்கு அழைத்து வருவது மற்றும் அவர்கள் வந்த பின் தங்குவதற்கான முகாம்களை அமைப்பது ஆகிய பணிகளை செய்து வந்தார். கடினமான சூழ்நிலையை அவர் மனிதாபிமானத்தோடு கையாண்டதாக பாராட்டப்பட்டார்.


latest tamil news


இம்மாத தொடக்கத்தில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் வடக்கு கோல்கட்டாவில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுத்திக் கொண்டார். ஞாயிறன்று அவருக்கு அறிகுறிகள் மோசமடைந்து சுவாச தடை ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திங்களன்று கொரோனாவுடனான தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார் தேவதத்தா. மறைந்த துணை ஆட்சியருக்கு, கணவர், நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளனர்.

கொரோனா பணிகளில் ஈடுபட்டிருந்த இளம் வயது துணை ஆட்சியர் இறந்தது சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதத்தா ராயின் மரணம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், வங்க மக்களுக்காக அவர் செய்த தியாகத்திற்கு மேற்கு வங்க அரசு சார்பாக வணக்கம் செலுத்துகிறேன். அவரது கணவரை தொடர்பு கொண்டு பேசி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்திற்கு பலத்தை வழங்குமாறும் இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
19-ஜூலை-202008:57:32 IST Report Abuse
Srinivasan Rangarajan மிகவும் வருத்தமளிக்கிறது ...இன்று வரும் செய்திகளை பார்த்தால் நிலைமை இன்னும் மோசமாகப் போகும் என தோன்றுகிறது. தொற்று சமூக பரவல் ஆகி விட்டது என்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் கூறியுள்ளது. மேலும் காற்றின் மூலமும் பரவுவதால் எச்சரிக்கை தேவை என கூறுகின்றனர்.நம்மை எல்லாம் முருகன் தான் காப்பாற்ற வேண்டும்
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
18-ஜூலை-202014:48:11 IST Report Abuse
Rangiem N Annamalai துயரமான செய்தி .ஆழ்ந்த இரங்கல்கள் .
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202016:14:51 IST Report Abuse
SanDan Irresponsible people - starting with Tablighis chased away doctors, nurses, police and frontline workers, threw stones at them, and see what it has led to The government should have brought in emergency and dealt with the rule breakers very strictly
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X