பொது செய்தி

இந்தியா

எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க டுரோன் வாங்க இந்தியா முடிவு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
டுரோன், இஸ்ரேல், இந்தியா, ராணுவம், முப்படை, முடிவு

புதுடில்லி: லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்னை காரணமாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் விதமாக ஹெரான் கண்காணிப்பு டுரோன்கள் மற்றும் டாங்கிகள் எதிர்ப்பு ஏவுகணைகளை, இஸ்ரேலில் இருந்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவசரகால நிதியில் இருந்து அவை வாங்கப்பட உள்ளது.

ஹெரான் வகை ட்ரோன்களை ஏற்கனவே, இந்தியா முப்படைகளின் பயன்படுத்தி வருகின்றன. லடாக் பகுதியில், விமானப்படை பயன்படுத்தி வருகிறது. விமானப்படையின் தேவையையும், பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு டுரோன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஹெரான் டுரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முப்படைகளில் பல ஆண்டுகள்பயன்பயன்படுத்தப்படும் இந்த டுரோன்கள், 2 நாட்கள் தொடர்ந்து 10 கி.மீ.,க்கு மேல் பறக்கும் திறன் பெற்றது. இந்த டுரோன்களில் ஆயுதங்களை சேர்க்கவும், பறக்கும் திறனை உயர்த்தும் ஆராய்ச்சியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.


latest tamil news



அதேபோல், டாங்கி எதிர்ட்டு ஏவுகணைகளை வாங்கவும் ராணவம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஏவுகணைகள் வாங்கப்பட்டன. இதனிடையே, உள்நாட்டிலேயே டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் டிஆர்டிஓ ஈடுபட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praba - madurai,இந்தியா
14-ஜூலை-202018:59:33 IST Report Abuse
praba வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X