பிணையக் கைதி போல வைத்துள்ளனர்: காங்., கூட்டணி எம்எல்ஏ

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Rajasthan, MLA, Hostages, Congress, Alliance, BJP, cong, political crisis, பிணையக் கைதிகள், எம்எல்ஏ, காங்கிரஸ், ராஜஸ்தான், கூட்டணி

ஜெய்ப்பூர்: எம்எல்ஏ., விடுதியில் பிணைய கைதிகளாக வைத்திருப்பதாக ராஜஸ்தானில் காங்., கூட்டணியில் இருந்த பாரதிய பழங்குடியினர் கட்சி எம்எல்ஏ., வீடியோ வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க காங்., கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சொகுசு பஸ் மூலம் ரிசார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெய்ப்பூரில் உள்ள பேர்மோன்ட் ஓட்டலில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்.,க்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக பாரதிய பழங்குடியினர் கட்சி தெரிவித்துள்ளது. இரு எம்எல்ஏ.,க்களை கொண்டுள்ள அக்கட்சி ஆதரவை விலக்கியதால் காங்.,க்கு நெருக்கடியானது.


latest tamil news


இந்நிலையில் இரு எம்எல்ஏ.,க்களில் ஒருவர் தன்னை பிணையக் கைதி போல் வைத்துள்ளதாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: தற்போது நாங்கள் அனைவரும் பிணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளோம். மூன்று நாட்களுக்கு நாங்கள் எம்எல்ஏ விடுதியில் வைக்கப்பட்டிருந்தோம். பலர் எங்களுடன் வாருங்கள் என்கின்றனர்.

தொகுதியை விட்டு நான் வெளியே சென்ற போது, மூன்று, நான்கு போலீஸ் கார்கள் என்னை பின்தொடர்ந்தது. அந்த போலீஸ் கார்கள் என்னை எங்கும் செல்ல விடவில்லை. அவர்கள் என்னையும், எனது காரையும் சுற்றி வளைத்தனர். எனது கார் சாவியை பிடுங்கிக்கொண்டனர். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
14-ஜூலை-202022:51:08 IST Report Abuse
Rajan நீ மட்டும் bengal ல இருந்த, தீதி உன்ன தூக்கு மாட்டி மேல அனுப்பியிருக்கும்,
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
14-ஜூலை-202021:11:38 IST Report Abuse
S.kausalya பணத்தையும் வாங்கி கிட்டு நீங்க அங்கிட்டு ஒடிட்டீங்கன்னா என்ன பண்றது. அதனால் தான் இந்த கொடுமை. எலக்சன் ல நிக்க நீங்க தலைமைக்கு பணம் கொடுத்தீங்க. இப்ப அவிங்க உங்களை தக்க வைக்க பணம் கொடுக்கிறார்கள். இந்த விளையாட்டு நல்ல தானே இருக்கு. பெரும்பான்மையை வெற்றி பெற்ற உடன் உங்களை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
14-ஜூலை-202019:35:16 IST Report Abuse
Mithun காங்கிரஸின் பரிதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X