பொது செய்தி

இந்தியா

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறை வெளியீடு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Online Classes, HRD, Guidelines, Announced, MHRD, guidelines, online class, schools, students, ஆன்லைன், வகுப்புகள், விதிமுறை, வெளியீடு

புதுடில்லி: இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. முக்கிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தனியார் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்த தொடங்கிவிட்டன. ஒரு சில அரசு பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகின்றன.


latest tamil news


இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து தற்போது அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள்:
* எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
* 1 முதல் 8ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்.
* 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நான் மதவாதி இல்லை. ஆன்மீகத்தை நம்புபவன்,ஆன்மீகத்தை மதிக்கும் இந்து நான் மதுரை நகரில் இருந்தும், Netwrok மிகவும் மெதுவாக உள்ளது. மேலும் என் குழந்தைக்கு (ஆறாம் வகுப்பு) நடக்கும் online வகுப்பை மொபைல் போனில் பார்க்கும் பொழுது எழுத்துக்கள் மிகவும் சிறியதாக தெரிகிறது. ஆசிரியர்களும் புத்தகத்தைப் பார்த்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலமாகவும் வகுப்பு நடத்துவது கிடையாது. ஏதோ கடமைக்கு அவர்கள் இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது ஒரு மத்திய அரசு பள்ளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X