பொது செய்தி

இந்தியா

கொரோனா அச்சுறுத்தல்: சுதந்திர தின கொண்டாட்டத்தில் மாற்றம்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சுதந்திர தினவிழா, கொண்டாட்டம், பிரதமர்மோடி,

புதுடில்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய வரலாற்றில் முதல்முறையாக, செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் மாற்றங்களுடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு, பிரதமர் மோடியின் உரையை, நேரடியாக பார்க்க விவிஐபிக்கள் மற்றும் மற்ற விருந்தினர்கள் என 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.

சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து, பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் மற்றும் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல், கடந்த வாரம் செங்கோட்டை சென்று சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு ஏற்பாடுகளை செய்யும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பள்ளி குழந்தைகள், என்சிசி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. கடந்த ஆண்டுகளில் பிரதமர் உரையை கேட்க வரும் 900 விஐபிக்கள், செங்கோட்டையில் இருபுறமும் உள்ள மாடங்களின் மேல் அமர வைக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு மாடங்களின் கீழே அமர வைக்கப்படுவார். இந்த ஆண்டு குறைந்த நபர்களே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு, கொரோனாவில் இருந்து மீண்ட 1,500 பேர் சுதந்திர தின விழாவிற்கு அழைக்கப்படுவார்கள். அதில், 500 பேர் போலீசார். மற்ற ஆயிரம் பேர், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அழைக்கப்படுவார்கள் இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜூலை-202022:26:30 IST Report Abuse
தமிழ்வேல் அப்படியாவது வெளியே வர்றாங்களான்னு பார்ப்போம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஜூலை-202022:20:26 IST Report Abuse
sankaseshan ஓரி பயம் இருந்திருந்தால் PM பதவிக்கு வந்தே இருக்கமாட்டார் Modiji .
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூலை-202021:42:18 IST Report Abuse
J.Isaac சுதந்திரம் மக்களுக்கா? ஆளுகிறவர்களுக்கா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X