பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 4,526 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 14) புதிதாக 4,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆகவும், பலி எண்ணிக்கை 2,099 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,467 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 59 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 106 ஆய்வகங்கள் (அரசு-53 மற்றும் தனியார் 53) மூலமாக, இன்று மட்டும் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,723 பேர் ஆண்கள், 1,803 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 89,834 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 57,467 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக உள்ளது.


latest tamil news




வயது வாரியாக பாதிப்பு


இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,099 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 7,304 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,22,075 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 ஆயிரத்து 945 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Brahamanapalle murthy - Bangalore,இந்தியா
15-ஜூலை-202008:50:08 IST Report Abuse
Brahamanapalle murthy எதற்கு எடுத்தாலும் அறிக்கை விடும் ஸ்டாலின் இதற்கு மௌனம் சாதிப்பது ஏன்? திமுக இந்துமக்களுக்கு எதிரி என்று நிர்ச்சலமாக தெரிகிறது. மேலும் சென்னை நீதிமன்றம் இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொண்டு தானாகவே முன்வந்து குற்றம் பதிவு செய்து சம்மந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும். இல்லாவிடில் மக்களுக்கு நீதிமன்றம் மேல் இருக்கும் நம்பிக்கை இழந்து விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X