சவுதியில் ஹஜ் பெருநாளில் மசூதிகளில் மட்டுமே தொழுகை

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

துபாய்: சவுதி அரேபியாவில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை மசூதிகளில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், திறந்த வெளிகளில் நடத்தக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளதாவது: இம்மாத இறுதியில் துவங்கும் ஹஜ் பெருநாளிற்கான சிறப்பு தொழுகையை, மசூதிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மசூதிகள் அனைத்திலும், கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். திறந்த வெளிகளில் நடத்தப்படும் திடல் தொழுகைக்கு அனுமதியில்லை. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனா பரவலால், சவுதி அரேபியாவில் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மே 31 முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி, மசூதிகளை திறந்தது சவுதி அரசு. நாட்டில் உள்ள 90 ஆயிரம் மசூதிகளிலும், கிருமி நாசினி தெளித்து, பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
15-ஜூலை-202006:53:39 IST Report Abuse
வல்வில் ஓரி அப்போ இந்த தடவை இந்தியாவில் கூட ரோட்டை அடைக்க மாட்டானுங்களா?...
Rate this:
Cancel
15-ஜூலை-202006:22:53 IST Report Abuse
இவன் இதையே இந்தியா ல சொன்னா சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆட்சி
Rate this:
Cancel
15-ஜூலை-202005:24:21 IST Report Abuse
இராமன் தெருவில் தொழுகை செய்து மற்றவர்களை தொந்தரவு செய்யகூடாதென்ற நல்ல என்னமெல்லாம் கிடையாது. எல்லாம் கொரோனாவின் மகிமை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X