பொது செய்தி

இந்தியா

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 6வது இடம்!

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Reliance Industries, Mukesh Ambani, 6th richest person, world

புதுடில்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 6வது இடத்துக்கு முன்னேறினார்.

முகேஷ் அம்பானி கடந்த வாரம், 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஆல்பாபெட் இணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி 6வது இடம் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, கடந்த 22 நாட்களில் மட்டும், 7.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலர், (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.44 லட்சம் கோடி) ஆக உள்ளது.


latest tamil newsப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜெப் பெசாஷ்(184 பில்லியன் டாலர்) உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் பில்கேட்ஸ் (115 பில்லியன் டாலர்) உள்ளார். 3வது இடம் பெர்னார்டு அர்னால்ட் (94.5 பில்லியன் டாலர்) 4,5வது இடம் முறையே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்(90.8 பில்லியன் டாலர்), ஸ்டீவ் பால்மர் (74.6 பில்லியன் டாலர்) பிடித்துள்ளனர். 6வது இடத்தில் முகேஷ் அம்பானியும் (72.4 பில்லியன் டாலர்), 7வது இடத்தில் லாரி பேஜ்-ம் (71.6 பில்லியன் டாலர்), 8வது இடத்தில் வாரன் பபெட்டும் (69.7 பில்லியன் டாலர்) உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thomas - Al Khor,கத்தார்
15-ஜூலை-202012:15:09 IST Report Abuse
Thomas பெட்ரோல் விலையை ஏற்றி வைத்து ஏழைகள் வயிற்றில் அடித்து பணக்காரனாகி என்ன செய்ய
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202011:46:35 IST Report Abuse
Lawrence Ron very soon he will move டு number one place ..as namma ji ஒர்கிங் வெரி ஹார்ட்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-202011:37:34 IST Report Abuse
Tamilan நாடும் உலகமும் சீரழிந்து கிடைப்பதற்கு இவர்களைப் போன்றோர்தான் காரணம். இந்த அளவுக்கு இவர்களை மக்களிடம் இருந்து சுருட்ட கொள்ளையடிக்க உறுதுணையாய் இருந்துள்ளன அரசியல் சட்ட அரசுகளும், அதில் உள்ள இவர்களின் கைக்கூலிகளையும் . திட்டமிட்டு காலம் காலமாக மக்கள் பணத்தையும் இந்திய சொத்துக்களையும் கொள்ளையடித்துக் கொண்டுள்ளார்கள் இவர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X