அவசியமற்ற பயணங்களுக்கு தடை: கனடா, அமெரிக்கா ஆலோசனை

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஒட்டாவா : கொரோனா தொற்றுகளையொட்டி, கனடாவும், அமெரிக்காவும் அவசியமற்ற பயணங்களுக்கு தடைவிதிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. நோய் பரவுதலை கட்டுப்படுத்த கனடா அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவும், அமெரிக்காவும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக விதிக்கப்பட்ட அவசியமில்லாத பயணங்களுக்கு தடை விதிக்க தயாராக உள்ளன. இதுகுறித்த இறுதி (உறுதியான) முடிவு எடுக்கப்படாவிட்டாலும், இதனை நன்கு அறிந்த ஒட்டாவா வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 21 உடன் முடிகிறது. இதில் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் ஏதுமில்லை. ஆய்வின் படி, அமெரிக்காவில் உள்ள சுமார் 50 மாநிலங்களில் கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 40 இடங்களில் நோய் தொற்றுகள் வேகமாக அதிகரித்துள்ளன. இதனால் கனடாவின் பல்வேறு எல்லைகளை மூட வேண்டும் என கனடாவின் மாகாண பிரதமர்கள் பலரும் கூறி வருகின்றனர்.


latest tamil newsஅமெரிக்காவின் வடக்கு பகுதிகளில் (சில மாநிலங்களில்) உள்ள அரரசியல்வாதிகள் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த அழுத்தம் கொடுத்தாலும் ஒட்டாவா வட்டாரங்கள் (கனடா), அமெரிக்காவின் நெருக்கடியின் தீவிர தன்மையை கருத்திற் கொண்டு இந்த நீட்டிப்பு தவிர்க்க முடியாதது என்று கூறியது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னதாக செய்தியாளர்களிடம், இந்த தடை குறித்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்த வார இறுதியில் இது தொடர்பான பல அறிவிப்புகளை கூறுவோம். எனக்கு உறுதியாக தெரியும் என கூறினார். தொடர்ந்து, கனடாவின் அதிக மக்கள் தொகையை கொண்ட ஒன்ராறியோவின் பிரதமர் டக் போர்டு நேற்று கூறுகையில், புளோரிடாவின் நிலைமை திகைப்பூட்டுகிறது. பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பயமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். எல்லைக்கு தெற்கே பாதிப்பு அதிகரிப்பதை கருத்திற்கொண்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பசிபிக் மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி, கடந்த வாரம் இந்த கோடையில், அமெரிக்கா வுடன் அத்தியாவசியமற்ற பயணத்திற்கு வாய்ப்பில்லை என கூறியது.


latest tamil newsஇதற்கு முன் ஜூலை 8 ல் பிரதமர் ட்ரூடோ கூறும்போது, கொரோனா தொற்றை பொறுத்த வரை அமெரிக்காவை விட கனடா பாதிப்புகளை சிறப்பாக கையாள்கிறது என கூறினார். கனடாவை விட 9 மடங்கு பெரிய மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா 1,35,000 க்கும் அதிகமான இறப்புகளை பதிவு செய்தது. இது கனடாவில் 8,783 ஆக உள்ளது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசியதாகவும், கனடிய அலுமினிய ஏற்றுமதியில், கட்டணங்களை விதிக்ககூடிய தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-ஜூலை-202013:49:02 IST Report Abuse
Ramesh Sargam ஒரு நல்ல முடிவு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜூலை-202012:40:13 IST Report Abuse
Lion Drsekar அதிகமாக பயணம் மேற்கொள்வது மக்கள் வரிப்பணத்தில் வாழும் முக்கிய பிரமுகர்கள் அல்லது அங்கு இருப்பவர்களை உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் பெறுபவர்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
15-ஜூலை-202000:13:02 IST Report Abuse
Sriram Seshadri, Mylapore Modi should learn from Trudeau.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X