பார்லி., புதிய கட்டடம்: 7 நிறுவனங்கள் முன் தகுதி ஏலம் சமர்ப்பிப்பு

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: புதிய பார்லி.,கட்டட கட்டுமானம் கட்டுவதற்கு 7 நிறுவனங்கள் முன் தகுதி ஏலங்களை சமர்ப்பித்துள்ளன.



latest tamil news



தற்போது இயங்கி வரும் பார்லி., கட்டடம் இட நெருக்கடி மிகுந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக பார்லி., அருகே புதிய கட்டடம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. கட்டடத்தின் கட்டுமானம் ரூ.889 கோடி மதிப்பீட்டில் 21 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசின் நிறுவனமான சிபிடபிள்யூ தெரிவித்து உள்ளது.


latest tamil news



இதனிடையே சிபிடபிள்யூ சார்பில் கட்டடம் கட்டுமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களிடம் ஆன்லைன் மூலம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது. இதன்படி டாடா ப்ராஜெக்ட் லிமிடெட், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட், என்சிசி லிமிடெட், ஷபூர்ஜி பல்லோன்ஜி மற்றும் கோ பிரைவேட் லிமிடெட், உத்தரபிரதேச ராஜ்கியா நிர்மன் நிகாம் லிமிடெட் மற்றும் பிஎஸ்பி திட்டங்கள் லிமிடெட். உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் முன் தகுதி ஏலங்களை சமர்ப்பித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
15-ஜூலை-202015:51:52 IST Report Abuse
truth tofday அரசியல் வியாதிகளுக்கு மட்டும் தான் வயிறு உண்டு பென்ஷன் பிரீ ஐற்பலனே காஸ் ரயில் குடியிருப்புகள் புதிய அலுவலகம் புதிய சண்டைகளை பாராளுமன்ற புதிய சொகுசு கார் புதிய சொகுசு விமானம் அமெரிக்க ப்ரெசிடென்டின் ஆ ஒன்னு ஏர் விமானம் ஆனால் வரி வாங்க மட்டும் ஏழைகள் நடுத்தர வர்க்கம்
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202012:43:06 IST Report Abuse
SAPERE AUDE இந்த ஏழு நிருவனங்களும் பெரியவையே. முக்கியமாக 1865ல் மும்பாயில் நிறுவப்பட்ட ஷப்பூர்ஜி பல்லோன்ஜீ கம்பெனி உலகப்பிரசித்தி பெற்றது. மஸ்கட்டில் ஓமான் சுல்தானின் மாபெரும் அல் ஆலம் அரண்மனை, துபாயில் கடலில் கட்டப்பட்டுள்ள லேக் டவர்ஸ் மற்றும் மா பெரும் கட்டிடங்கள், கடற்பாலங்கள் இந்த நிறுவனம் கட்டியதே. இந்த நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி சில வருஷங்கள் டா டா கம்பெனிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
15-ஜூலை-202011:27:35 IST Report Abuse
Chandramoulli ஷாபூர்ஜி நிறுவனம் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X