முன்னாள் காங். தேசியசெய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
 
Congress suspends its nationalமுன்னாள் காங். தேசியசெய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜஹா கட்சியிலிருந்து சஸ்பெண்ட்: spokesperson Sanjay Jha for anti-party activities

ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பைலட் ஆதரவாளர்களாக உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் கெலாட்டுடன், மோதல் போக்கை பின்பற்றி வந்த பைலட், தன் ஆதரவாளர்களுடன் இணைந்து தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களை வைத்து குதிரை பேரம் நடத்துவதாக, ராஜஸ்தான் மாநில போலீசார், சச்சின் பைலட்டுக்கு, 'நோட்டீஸ்' அளித்தனர். தொடர்ந்துமுதல்வர் அசோக் கெலாட், கவர்னர் மாளிகைக்குச் சென்று, கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவை சந்தித்தார்.


latest tamil news
அப்போது, சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவாளர்கள் விஷ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் பரிந்துரை செய்தார். ஆட்சியை கவிழ்க்க, இவர்கள் மூவரும் சதி செய்ததாக அவர் குறிப்பிட்டார். முதல்வரின் பரிந்துரையை ஏற்று, மூவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக, கவர்னர் அறிவித்தார்.

இதையடுத்து காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா , கட்சிக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சஞ்சய் ஜஹா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


யார் இந்த சஞ்சய் ஜா


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர், சஞ்சய் ஜா. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர், சமீபத்தில், ஆங்கில நாளிதழ் ஒன்றில், கட்டுரை எழுதிஇருந்தார். அதில், 'காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில், அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுகிறது. 'இதை உணர முடியாத தலைவர்கள் பலர், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். காந்திய சிந்தனை மற்றும் நேருவின் கண்ணோட்டத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள என்னை போன்றவர்களுக்கு, கட்சி சிதைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது' என, கூறியிருந்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இவரிடமிருந்த செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கட்சியலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்நிலையில் இன்று முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சொகுசு ஓட்டலில் நடந்தது. பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜூலை-202011:07:32 IST Report Abuse
Lion Drsekar அரசியல் கட்சியில் இருப்பவர்கள் நத்தைபூச்சிபோல் இருந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும், பரம்பரை அடிமையாய் இருந்தால் எலும்பு துண்டுகள் கிடைக்கும் தலை தூக்கி பார்த்தல் தலை துண்டாகும் குடும்பமே சாகவேண்டும், வாழ்க ஜயனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
15-ஜூலை-202010:53:23 IST Report Abuse
Balasubramanian Ramanathan காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லாத போதிலிருந்தே தங்கபாலுவும், பீட்டர் அல்போன்ஸும் கருணாநிதியின் இரண்டு மகன்களாக செயல்பட்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள். தந்தை திருவருளால் இன்று தமிழ்நாட்டிலுள்ள " கல்வி தந்தை"களாக திகழ்கிறார்கள். இன்றளவும் கட்சி அட்டையில்லாத திமுக தொண்டர்களாக வலம் வருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் தான் பெயர் இருக்கிறது.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
15-ஜூலை-202010:42:38 IST Report Abuse
srinivasan Family business l laapam kurainthullathaal, lay off seiyapadukiraarkal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X