ஆஹா! கொரோனாவை தவிர்க்க ரயில்களில் புதிய வசதி; பயணியர் பாதுகாப்புக்காக அதிரடி மாற்றங்கள்| Dinamalar

ஆஹா! கொரோனாவை தவிர்க்க ரயில்களில் புதிய வசதி; பயணியர் பாதுகாப்புக்காக அதிரடி மாற்றங்கள்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (5) | |
புதுடில்லி: ஊரடங்கிற்கு பின், ரயில் போக்குவரத்து மீண்டும் முழு வீச்சில் துவங்கும் போது, பயணியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயில் பெட்டிகள் தயாராகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மூன்று மாதங்களுக்கும் மேலாக ரயில் போக்குவரத்து முடங்கியது.சிறப்பு பெட்டிகள்இதன் பின்,
கொரோனா, தவிர்க்க ,ரயில்களில், புதிய வசதி, பயணியர் பாதுகாப்பு, மாற்றங்கள், மாற்றங்கள்

புதுடில்லி: ஊரடங்கிற்கு பின், ரயில் போக்குவரத்து மீண்டும் முழு வீச்சில் துவங்கும் போது, பயணியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயில் பெட்டிகள் தயாராகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மூன்று மாதங்களுக்கும் மேலாக ரயில் போக்குவரத்து முடங்கியது.


சிறப்பு பெட்டிகள்இதன் பின், சில மாநிலங்களில் மட்டும், குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான மாநில அரசுகள், தங்கள் மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்தை இயக்க சம்மதிக்கவில்லை. இதையடுத்து, ஆகஸ்ட், 12 வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து, ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பின், ரயில் போக்குவரத்தை மீண்டும் முழு வீச்சில் இயக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் பல நவீன வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இ

து குறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனாவுக்கு பிந்தைய ரயில் பயணத்துக்காக, சிறப்பு ரயில் பெட்டிகள் தயாராகி வருகின்றன. ஏற்கனவே உள்ள பெட்டிகளில், பலவிதமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 'ஏசி' மற்றும் சாதாரண வகுப்பு என, தனித்தனியே சிறப்பு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


தானியங்கி கருவிகள்இந்த பெட்டிகளில், கழிப்பறை, கை கழுவும் இடம் ஆகியவற்றில், சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைகளை பயன்படுத்தி, குழாயை திருகுவது அல்லது அழுத்துவது ஆகியவற்றை முற்றிலும் தடை செய்யும் வகையில், சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கை அல்லது கால்களை நீட்டினால், தானாக தண்ணீர் கொட்டும் வகையிலான தானியங்கி கருவிகள் இவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சோப், குப்பை போன்றவற்றை போடுவதற்கான கூடைகள், கால்களால் இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தாமிர முலாம் பூச்சுரயில் கழிப்பறையில், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாயை பயன்படுத்தவும், கைகளின் உதவி இனி தேவையிருக்காது. கால்களால் அழுத்தி, தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 'ஏசி' பெட்டிகளில், காற்றை சுத்தம் செய்வதற்கான சிறப்பு கருவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதவு, கைப்பிடிகள் ஆகியவற்றை கைவிரல்களால் பிடித்து திறப்பதற்கு பதிலாக, முன் கைகளால் தள்ளுவது போன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைப்பிடி, தாழ்ப்பாள் ஆகியவற்றில் தாமிர முலாம் பூசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பிடிகளில் வைரஸ் இருந்தால், அடுத்த சில நிமிடங்களிலேயே அது அழிந்து விடும் வகையில், சில தொழில்நுட்பங்களும் புகுத்தப்படவுள்ளன.

மேலும், ரயில் பெட்டிகளில் உள்ள கை கழுவும் இடம், இருக்கை, படுக்கை, கழிப்பறை, கண்ணாடி ஜன்னல், உணவு சாப்பிடும் டேபிள் உள்ளிட்ட, மனித நடமாட்டம் உள்ள அனைத்து இடங்களிலும், 'டைட்டானியம் டையாக்சைடு' எனப்படும் வேதிப்பொருள் முலாம் பூசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உறுதிஇதில், வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் வகையிலான வேதிப்பொருட்கள் கலந்திருக்கும்.'இது, நச்சுத் தன்மையற்றது. மனித நலனுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது' என, அமெரிக்க உணவு மற்றும் மருந்து பொருள் நிர்வாகத்தின் சான்று பெற்றது. இந்த டைட்டானியம் டையாக்சைடு முலாமின் வீரியம், 12 மாதங்களுக்கு இருக்கும். அதன்பின், மீண்டும் அந்த முலாம் பூசப்பட வேண்டும்.

இந்த புதிய மாற்றங்கள், வசதிகளுடன் கூடிய இரண்டு பெட்டிகள், முதல் கட்டமாக, பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் தயார் நிலையில் உள்ளன. இந்த மாற்றங்களை செய்வதற்கு, ஒரு பெட்டிக்கு, குறைந்தது, 7 - 9 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மாற்றங்கள் குறித்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலும் உறுதி செய்து உள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


புதிய, 'டெண்டர்'ரயில்வேயில், பயணியருக்கான உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் நவீன கேமராக்களை வாங்குவதற்கு புதிய, 'டெண்டர்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே டெண்டர் பெற்ற நிறுவனம், அதற்கான உதிரி பாகங்களை, சீன நிறுவனத்திடமிருந்து வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X