துறைமுக திட்டம் ரத்து? அரசு மீது காங்., பாய்ச்சல்!

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (41) | |
Advertisement
புதுடில்லி : 'சபஹர் துறைமுக ரயில் திட்டம் தொடர்பாக, இந்தியாவுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஈரான் அறிவித்துள்ளது; இது, நமக்கு மிகப் பெரிய இழப்பு. மத்திய அரசின் மோசமான வெளியுறவு கொள்கைக்கு இது நல்ல உதாரணம்' என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கூறியதாவது: மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சபஹர்
ஈரான், சபஹர் துறைமுகம், ரயில் திட்டம், ஒப்பந்தம், அபிஷேக் சிங்வி , வெளியுறவு கொள்கை, வர்த்தகரீதியாக, இழப்பு

புதுடில்லி : 'சபஹர் துறைமுக ரயில் திட்டம் தொடர்பாக, இந்தியாவுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஈரான் அறிவித்துள்ளது; இது, நமக்கு மிகப் பெரிய இழப்பு. மத்திய அரசின் மோசமான வெளியுறவு கொள்கைக்கு இது நல்ல உதாரணம்' என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கூறியதாவது: மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்திலிருந்து, ஜகிதன் என்ற இடத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, மத்திய அரசு, சில ஆண்டுகளுக்கு முன், அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க, நம் அரசு முன் வந்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மத்திய ஆசிய நாடுகளுக்கும், நமக்கும் இடையேயான வர்த்தக உறவு அதிகரிக்கும்.

ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை அளிப்பதில், மத்திய அரசு தாமதம் செய்வதாக கூறி, இதிலிருந்து, ஈரான் அரசு விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தை, தாங்களே செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.ஈரானின் இந்த நடவடிக்கை, நமக்கு பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். பா.ஜ., அரசின் மிக மோசமான வெளியுறவு கொள்கைக்கு, இது, நல்ல உதாரணம். இந்த வாய்ப்பை, நம் அண்டை நாடான சீனா பயன்படுத்திக் கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
22-ஜூலை-202014:45:33 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது உண்மை BJP இருப்பதால் தான் நாங்கள் உணவு உண்கலத்தில் காங்கிரஸ் PERIOD IL பசி பஞ்சம் பெட்ரோல் 100 GAS DESEL எல்லாம் ரொம்ப அதிகம் அதனால் தான் இங்கே பொழைக்க முடியாது என்று ஓடிவிட்ட புத்திசாலி
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
16-ஜூலை-202007:34:55 IST Report Abuse
madhavan rajan சில ஆண்டுகளுக்குமுன் ஒப்பந்தம் செய்தது என்று பொத்தாம்பொதுவாக கூறியிருக்கிறார். ஆண்டை எதற்கு குறிப்பிடவில்லை. அது காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்தால் நல்ல கமிஷன் வாங்கியிருப்பார்கள். அதனால்தான் கமெண்ட் எழுதுகிறார்கள் போல.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
15-ஜூலை-202022:39:25 IST Report Abuse
Mithun மோடிஜி சொன்ன தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன என்பதை காங்கிரஸ் கட்சி தெரிந்துகொள்ள முயற்சிக்கவும். இந்தியா எந்த நாட்டிற்கும் அடிமையில்லை. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்காவையே எதிர்த்த நாடு. பொருளாதாரத்தில் அகல பாதாளத்தில் கிடக்கும் ஈரானை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X