பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ படிப்பு: உள் ஒதுக்கீடுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மருத்துவ படிப்பு, உள் ஒதுக்கீடு, தமிழக அமைச்சரவை ,ஒப்புதல், இ.பி.எஸ், நீட் தேர்ச்சி, கட்டாய கல்வி உரிமை சட்டம்

சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் அளிக்கப்படும் உள் ஒதுக்கீட்டில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களையும் சேர்க்க, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.மாலை, 5:00க்கு துவங்கிய கூட்டம், 6:00 மணிக்கு நிறைவடைந்தது. உடல் நலக்குறைவு காரணமாக, அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, செல்லுார் ராஜு, சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.

கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில், தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படித்து, பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து தேர்ச்சி பெறும் மாணவர்களையும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அனுமதிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில், ஏற்கனவே உள்ள, தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும், புதிதாக தொழில் துவங்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 14 தொழில் நிறுவனங்கள், 5,000 கோடி ரூபாயில் முதலீடு செய்ய, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து, விரைவில், மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீட்டிற்கு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-202015:37:49 IST Report Abuse
Sriram V Stop your reservation politics. Political parties are destroying the country with reservation politics for political gain. Hope other pillars of democracy will influence the safeguarding country
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
15-ஜூலை-202008:36:53 IST Report Abuse
vbs manian கலை மகள் அரசியல் வாதிகளின் கால்களில் விழுந்து கிடக்கிறாள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜூலை-202004:20:21 IST Report Abuse
blocked user தகுதியானவனைத்தவிட மற்ற எல்லோருக்கும் ஒதுக்கிவிடவேண்டும்... இல்லை என்றால் உண்மையான மருத்துவர்கள் உறுவாகிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X