பொது செய்தி

இந்தியா

'ஆன்லைன்' வகுப்புகளுக்கு நேரம் நிர்ணயித்தது மத்திய அரசு

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
online class, Students, Mobile, ஆன்லைன் வகுப்பு, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மாணவர்கள், 30 நிமிடங்கள்

புதுடில்லி: ஒரு நாளில், எத்தனை மணி நேரம், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து, பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், வழிகாட்டுதல்களை அளித்து உள்ளது.

'கொரோனா' அச்சுறுத்தலை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல், நாடு முழுதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சில பள்ளிகள், காலை முதல் மாலை வரை, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாகவும், இதனால் மாணவர்கள், அதிக நேரம் கணினி மற்றும் 'மொபைல் போன்' திரைகளை பார்ப்பதால், கண்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகள் குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் விபரம்:ப்ரீ கே.ஜி., மாணவர்களின் வயது காரணமாக, அவர்களுக்கு மொபைல் போன் மற்றும் லேப்டாப் வழியே பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு, 'டிவி மற்றும் ரேடியோ'க்கள் வழியாக பாடம் நடத்த வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும், விளையாட்டும் நிறைந்த செயல்முறை வகுப்புகளை நடத்த வேண்டும்.

எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள், ஒரு நாளில், 30 நிமிடங்களுக்கு மேல் நடத்தப்படக் கூடாது. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு வகுப்புகள் வரை மட்டுமே நடத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்பும், 45 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. ஒன்பது முதல், பிளஸ் 2 வரை, ஒரு நாளில், நான்கு வகுப்புகள் மட்டும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்பும், 30 முதல், 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202023:14:30 IST Report Abuse
murugan In Madurai cbse (KMR) schools, for 6th std student, there are 4 periods per day. students are getting head ache everyday after this 4 period timetable.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
15-ஜூலை-202006:40:18 IST Report Abuse
Indhuindian நல்ல செய்தி. இதை தொடர்ந்து B.A., B.Sc.,B.COM போன்ற படிப்புகளையும் ஆன்லைனில் நடத்துங்க. ப்ராக்டிகலுக்கு மட்டும் கல்லூரிகளுக்கு பேட்ச் பேட்ச்சா ஐந்து பேருக்கு மேல் இல்லாமல் கல்லூரிக்கு வர சொல்லுங்க. இந்த பஸ் டே போன்ற கூத்தெல்லாம் இருக்காது பாருங்க. ஜனங்களும் போலீசும் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க. போக்கு வரத்து கழக பஸ்களும் வுடையாம இருக்கும். பஸ் ஸ்டாப்பிலே ஈவ் டீஸிங்கும் குறையும்
Rate this:
Cancel
குஞ்சுமணிதாசன் - Kailasa ,ஈக்வடார்
15-ஜூலை-202002:05:35 IST Report Abuse
குஞ்சுமணிதாசன் குழந்தைகள் கல்வி மேல மத்திய பிஜேபி அரசுக்கு அவ்ளோ அக்கறை. பிஜேபி க்கு ஒட்டு போடாத தற்குறிகளுக்கும் கல்வி அறிவை இந்த கொரோன காலத்திலும் கொடுக்குது பிஜேபி அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X