கொரோனா சிகிச்சை செலவு: தமிழக அரசு உத்தரவு| New medical scheme for coronavirus treatment | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை செலவு: தமிழக அரசு உத்தரவு

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020
Share
corona, coronavirus treatment, insurance, கொரோனா, சிகிச்சை, தமிழக அரசு, உத்தரவு

சென்னை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, கொரோனா மருத்துவ செலவை திரும்ப வழங்கும்படி, கருவூல துறை கமிஷனர், அனைத்து கருவூல துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X