பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் தளர்வுகள் அமல்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை;மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வருகிறது.வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா, மதுரை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள, கடிதம்:மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு, 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.



latest tamil news



இன்று முதல், ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறக்க அனுமதிக்கலாம். வழிபாட்டின் போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.நகர்ப்புற பகுதிகளில், அனுமதி கிடையாது.அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.


latest tamil news



தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த சேவை நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். குறைந்தபட்சம், 20 சதவீத பணியாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்.வணிக வளாகம் தவிர்த்து, நகைக்கடை,ஜவுளிக்கடை போன்றவை, 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 8:00 வரை செயல்படலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
15-ஜூலை-202008:08:12 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் கொண்டாட்டம் தான்.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
15-ஜூலை-202008:07:12 IST Report Abuse
 Sri,India காலாவதியாகும் நிலையில் உள்ள டாஸ்மாக் சரக்கை விற்கத் தான் ஊரடங்கு தளர்வா ??
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
15-ஜூலை-202007:37:51 IST Report Abuse
 Sri,India இனி மருத்துவ மனைகளுக்கு கொண்டாட்டம் தான். நோய் தடுப்பு நடவடிக்கையை எடுக்காமல் தேவை இல்லாமல் மக்களை ஒன்று கூட்டி நோயை வேகமாக பரப்ப போகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X