'தென் சீன கடல் சீனாவுக்கு சொந்தமல்ல'

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
us, china, south china sea, mike pompeo, 'தென் சீன, கடல், சீனாவுக்கு, சொந்தமல்ல'

வாஷிங்டன் : ''தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சீனாவின் திட்டத்தை, உலக நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது,''என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் சீன கடல் பகுதியில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு மாறாக, மலேஷியாவில் இருந்து, 50 கடல் மைல் துாரமுள்ள, ஜேம்ஸ் ஷாவோல் தீவை, ஆயிரம் கடல் மைல் துாரத்தில் உள்ள, சீனா, சொந்தம் கொண்டாடுகிறது.


latest tamil news



அதுபோல, பிலிப்பைன்சுக்கு சொந்தமான, ஸ்பராட்லி தீவுகளை, பொருளாதார மண்டலமாக மாற்ற, சீனா முயற்சிக்கிறது. சீனா, தன் கடலோரத்தில் இருந்து, 12 கடல் மைல் தாண்டி, எந்த பகுதியையும் சொந்தம் கொண்டாட முடியாது.கடந்த, 2016, ஜூலை, 12ல், கடல் விவகாரங்களுக்கான மத்தியஸ்த தீர்ப்பாயம், தென் சீன கடல் பகுதிக்கு உரிமை கோரி சீனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, பிலிப்பைன்சுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனால், தென் சீன கடல் பகுதிக்கு, சீனா உரிமை கோர முடியாது.

சீனாவுக்கு சட்டப்படி அதிகாரமில்லை.அக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசிய கடலோர நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டது. அதை, சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, கடல் சாம்ராஜ்யத்தை நிறுவ சீனா முயல்கிறது.இதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒருபோதும் ஏற்காது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இறையாண்மையை காக்க, அமெரிக்கா என்றும் துணை நிற்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மைக் போம்பியோவின் இந்த அறிவிப்புக்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே விரோதத்தை துாண்டுவதாக, அமெரிக்கா மீது குற்றம்சாட்டியுள்ளது.தென் சீன கடலில் கனிம வளம்தெற்காசிய கடல் பிராந்தியத்தில், 130 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது, தென் சீன கடல். கடல் உணவுகள் மற்றும் கனிம வளம் நிறைந்த இக்கடல் பகுதியை, சீனா பல ஆண்டுகளாக, சட்டத்திற்கு புறம்பாக சொந்தம் கொண்டாடுகிறது.
அத்துடன், அங்கு, செயற்கை தீவுகளை உருவாக்கி, ராணுவ தளங்களை அமைத்து வருகிறது.ஆனால், தென் சீன கடல் பகுதி, தங்களுக்குத் தான் சொந்தம் என, வியட்னாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே, மலேஷியா ஆகிய நாடுகள் உரிமை கோரி வருகின்றன. அங்கு, இந்நாடுகளை சேர்ந்தோர் மீன் பிடிக்கவும், கனிம வள ஆய்வு நடத்தவும், சீனா தடையாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sagar saritha - Chennai,இந்தியா
15-ஜூலை-202015:39:37 IST Report Abuse
sagar saritha தென் சீன கடல் என்று குறிப்பிடாமல் தென் கடல் என்று மட்டும் குறிப்பிடவும். எல்லா இடங்களிலும் இதே போல் குறிப்பிட்டால் நாளடைவில் சீனா என்கிற அந்த பெயர் ( மட்டுமாவது) மறைந்துவிடும்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
15-ஜூலை-202014:34:51 IST Report Abuse
Rameeparithi நாடு பிடிக்கும் ஆசை சீனாவின் அழிவிற்கு அஸ்திவாரம் . அகிலமே எங்களுக்கு தான் சொந்தம் என்று அலைவதைத் தவிர வேறு வழியில்லை
Rate this:
Cancel
Balam - Chennai,இந்தியா
15-ஜூலை-202013:12:26 IST Report Abuse
Balam All this time, America and Britain claimed this whole world and did lot of atrocities...now why they become too much envy on china...so it proves that china already overtaken America..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X