காங்., ஜனநாயகத்தை விட்டு விலகுகிறது டுவிட் செய்த சஞ்சய் ஜா சஸ்பெண்ட்

Added : ஜூலை 15, 2020
Share
Advertisement
புதுடில்லி: கட்சி விரோத மற்றும் ஒழுங்கீனத்தை மீறியதாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் ஜா,இவர் கட்சியின் செயதி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் கட்டுரை ஒன்றில் தனது கட்சியை விமர்சித்து இருந்தார். இதனையடுத்து அவர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில்

புதுடில்லி: கட்சி விரோத மற்றும் ஒழுங்கீனத்தை மீறியதாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.



latest tamil news



காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் ஜா,இவர் கட்சியின் செயதி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் கட்டுரை ஒன்றில் தனது கட்சியை விமர்சித்து இருந்தார். இதனையடுத்து அவர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஜா தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தனது ஜனநாயக கடைமைகளில் இருந்து வெகுதூரம் விலகி சென்று விட்டது என பதிவிட்டிருந்தார். இதனிடையே அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்த சில நிமிடங்களிலையே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பாலாசாகேப் தோரத் எழுத்து பூர்வமாக அறிவித்தார்.

இது குறித்து ஜா கூறுகையில் இது என்னை எதுவுமே ஆச்சரியப்படுத்தவில்லை.நான் செய்த கட்சி விரோத நடவடிக்கைகள் என்ன என கேட்டார்.


மேலும் சச்சின் பைலட்பை பற்றி கூறிய அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் மோசமான நிலையில் இருந்த காங்கிரசை கடந்த (2013-18 ) ஐந்தாண்டுகளாக சச்சின் கட்சிக்கு உழைப்பை கொடுத்தார். இதன்காரணமாக 21 இடங்களில் இருந்து 100 இடங்களுக்கு வந்துள்ளது. நாங்கள் மிகவும் வெளிப்படையானவர்கள் என கூறினார்.



காங்கிரஸ் கட்சியின் தலைமை மாநிலங்களில் (ம.பி., ராஜஸ்தான்) நிலவும் ஸ்திரமற்ற தன்மையை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்தும். இரு இளம் தலைவர்களை கட்சி கையாண்ட விதம் குறித்தும் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.


latest tamil news


முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் "எங்கள் கட்சிக்காக கவலைப்படுகிறோம், குதிரைகள் எங்கள் நிலையிலிருந்து உருண்ட பின்னரே நாங்கள் எழுந்திருப்போமா" என்று கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.





Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X