பொது செய்தி

தமிழ்நாடு

தனித்த சித்தா சிகிச்சைக்கு மவுசு: விரைந்து குணமடைவதால் ஆர்வம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
siddha therapy, chennai news, tamil nadu news, coronavirus, covid 19, சித்தா சிகிச்சை,மவுசு, ஆர்வம், கொரோனா,

சென்னை : சென்னை, வியாசர்பாடியில், தனித்த சித்தா சிகிச்சையில், நோயாளிகள் விரைந்து குணமடைவதால், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தமிழகத்தில், அலோபதி, சித்தா மற்றும் யோகா என, ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து, பெரும்பாலானோர் குணமடைந்து வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு, சித்தா சிகிச்சை பலன் அளித்து வரும் நிலையில், தனித்த சித்தா சிகிச்சையை, அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, அரும்பாக்கம், சித்தா மருத்துவ மனைக்காக, வியாசர்பாடி, அம்பேத்கர் கலை கல்லுாரி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கல்லுாரியில், தனித்த சிகிச்சைக்கு, 240 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஜூன், 24ம் தேதி துவக்கப்பட்ட, தனித்த சித்தா சிகிச்சையில், நேற்று வரை, 106 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது, 90 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news




இது குறித்து, அரசு சித்தா மருத்துவமனை டாக்டர் சாய் சதீஷ் கூறியதாவது: சிகிச்சையில் இருப்பவர்கள், தினமும் மஞ்சள், உப்பு கலந்த வெந்நீரில், வாய் கொப்பளிக்கின்றனர். மேலும், கபசுர குடிநீர், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லிக்காய் சாறு, துாதுவளை உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. உடலில் செரிமான பிரச்னைகளுக்கு, மோரில், ஐயங்காய பொடி, ரத்த ஓட்டத்திற்கு நன்மை தரும் ஆடாதொடை குடிநீர் வழங்கப்படுகிறது. அனைத்து உணவுகளும், சித்தா முறையில் வழங்கப்படுகின்றன. மேலும், அரசு பரிந்துரைத்துள்ள, 'ஜிங்க், வைட்டமின் சி' மாத்திரை களையும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம். இதனால்,அனைவரும் குணம் அடைகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
15-ஜூலை-202019:25:21 IST Report Abuse
S. Narayanan புத்தி உள்ளவர்கள் பிழைப்பார்கள்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
15-ஜூலை-202015:06:24 IST Report Abuse
Siva சித்த மருத்துவம் என்பது சரியா... சித்தா என்பது வழிமுறை அல்லது வாழ்க்கை முறை. வீட்டு சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பாதி பொருட்கள் மருத்துவ குணம் கொண்டது தான். நாம் ஆங்கிலத்துக்கு அடிமையானது போல அலோபதிக்கும் அடிமையாகி விட்டோம்.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
15-ஜூலை-202014:47:27 IST Report Abuse
Vivekanandan Mahalingam அறிவாலயத்தில் அறிவில்லாதவர்கள் இருப்பதால் அறிவு உள்ளவர்கள் அறிவாலயம் பற்றி பேசுவதை தவிர்க்கவும்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
15-ஜூலை-202018:07:41 IST Report Abuse
தமிழ்வேள்இல்லாததை இருப்பதாக சொல்வது-இல்பொருள் உவமையணி- தமிழ் அணியிலக்கணம்..அறிவு இல்லாதவர்க்ள் கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால், ஒரு நகைச்சுவைக்காக, அறிவாலயம் என்று அதற்கு பெயர்..ஒரு டீக்கடையில் நடக்கும் விவாதங்களின் அளவில் கூட இங்கு நடக்கும் விவாதங்களில் விவஸ்தை / அறிவு இருப்பதில்லை..அதனால்...இந்த பெயர்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X