தனித்த சித்தா சிகிச்சைக்கு மவுசு: விரைந்து குணமடைவதால் ஆர்வம்| Unique siddha therapy creating curiosity among people | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனித்த சித்தா சிகிச்சைக்கு மவுசு: விரைந்து குணமடைவதால் ஆர்வம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (21)
Share
siddha therapy, chennai news, tamil nadu news, coronavirus, covid 19, சித்தா சிகிச்சை,மவுசு, ஆர்வம், கொரோனா,

சென்னை : சென்னை, வியாசர்பாடியில், தனித்த சித்தா சிகிச்சையில், நோயாளிகள் விரைந்து குணமடைவதால், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தமிழகத்தில், அலோபதி, சித்தா மற்றும் யோகா என, ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து, பெரும்பாலானோர் குணமடைந்து வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு, சித்தா சிகிச்சை பலன் அளித்து வரும் நிலையில், தனித்த சித்தா சிகிச்சையை, அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, அரும்பாக்கம், சித்தா மருத்துவ மனைக்காக, வியாசர்பாடி, அம்பேத்கர் கலை கல்லுாரி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கல்லுாரியில், தனித்த சிகிச்சைக்கு, 240 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஜூன், 24ம் தேதி துவக்கப்பட்ட, தனித்த சித்தா சிகிச்சையில், நேற்று வரை, 106 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது, 90 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news
இது குறித்து, அரசு சித்தா மருத்துவமனை டாக்டர் சாய் சதீஷ் கூறியதாவது: சிகிச்சையில் இருப்பவர்கள், தினமும் மஞ்சள், உப்பு கலந்த வெந்நீரில், வாய் கொப்பளிக்கின்றனர். மேலும், கபசுர குடிநீர், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லிக்காய் சாறு, துாதுவளை உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. உடலில் செரிமான பிரச்னைகளுக்கு, மோரில், ஐயங்காய பொடி, ரத்த ஓட்டத்திற்கு நன்மை தரும் ஆடாதொடை குடிநீர் வழங்கப்படுகிறது. அனைத்து உணவுகளும், சித்தா முறையில் வழங்கப்படுகின்றன. மேலும், அரசு பரிந்துரைத்துள்ள, 'ஜிங்க், வைட்டமின் சி' மாத்திரை களையும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம். இதனால்,அனைவரும் குணம் அடைகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X