சச்சின் பைலட் விலகல் வருத்தமளிக்கிறது: சசி தரூர்| Sashi Tharoor sad at Sachin Pilot's exit | Dinamalar

சச்சின் பைலட் விலகல் வருத்தமளிக்கிறது: சசி தரூர்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (20)
Share
புதுடில்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கட்சியிலிருந்து விலகுவதைக் கண்டு வருந்துவதாக அக்கட்சியின் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் உட்கட்சி பூசலால், தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில், காங்., சார்பில்

புதுடில்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கட்சியிலிருந்து விலகுவதைக் கண்டு வருந்துவதாக அக்கட்சியின் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் உட்கட்சி பூசலால், தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில், காங்., சார்பில் நடத்தப்பட்ட எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை 2 நாட்களாக புறக்கணித்ததால், அவர் மீது கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, துணை முதல்வர் பதவியில் இருந்தும், ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.latest tamil news


இது குறித்து காங்., கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகுவதை கண்டு வருத்தமடைகிறேன். அவரை கட்சியில் சிறந்த நபர்களில் ஒருவராகவும், எதிர்காலமாகவும் நினைத்திருந்தேன். ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவர் கட்சியிலிருந்து விலகுவதை விட, இணைந்து செயல்பட்டு கட்சியை மேலும் திறம்பட செயல்படுத்தி முன்னேற்றம் காணலாம், எங்கள் கனவுகளையும் நிறைவேற்றலாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X