சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் முத்துராஜிடம் சாத்தான்குளம் ஸ்டேஷனில் சிபிஐ விசாரணை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Sathankulam case, Sathankulam custodial case, custodial death, சாத்தான்குளம், எஸ்ஐ, முத்துராஜ், சிபிஐ, விசாரணை, பென்னிக்ஸ்,

திருநெல்வேலி: தூத்துக்குடி,சாத்தான்குளத்திற்கு போலீஸ்காரர் முத்துராஜை அழைத்துவந்த சி.பி.ஐ.,அதிகாரிகள் இரவில் விசாரணை மேற்கொண்டனர்.


latest tamil news


சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., அதிகாரிகள், கைதாகி மதுரை சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ்,போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோரை கஸ்டடி கேட்டு மனு செய்தனர். நேற்று நீதிமன்ற அனுமதியின் பேரில் ஐந்து பேரையும் சி.பி.ஐ.,அதிகாரிகள் விசாரிக்க துவங்கினர். முதற்கட்டமாக, சம்பவத்தன்று ஜெயராஜை அவரது கடையில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்த போலீஸ் முத்துராஜை, நேற்று இரவு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்தனர்.சி.பி.ஐ.,கூடுதல் எஸ்.பி.,சுக்லாவும் வந்திருந்தார்.


latest tamil news


சம்பவத்தன்று இரவில் என்ன நடந்தது என முத்துராஜை நிகழ்த்தி காட்டச்சொல்லி விசாரித்தனர். இரவு நீண்டநேரம் விசாரணை நடந்தது. பென்னிக்ஸ் கடை பகுதிக்கு கொண்டு வந்து முத்துராஜிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பவத்தன்று நடந்ததை நடித்து காட்டியதை முழுமையாக சி.பி.ஐ அதிகாரிகள் வீடியோ பதிவு செய்து கொண்டனர். பின்னர், சுமார் 1.30 மணி நேரத்திற்கு பின் அழைத்து செல்கின்றனர்.


latest tamil news



எஸ்.ஐ.க்கள் மீது புதிய வழக்கு


துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்குதலில் இறந்தனர். இது குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடக்கிறது. இதனிடையே துாத்துக்குடி மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன் ஜூன் 25ல் கோவில்பட்டி கிளை சிறையில் கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜாசிங் என்ற கைதி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், சாத்தான்குளம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் என்னை சந்தேகத்தின் பேரில் எஸ்,ஐ.,ரகுகணேஷ் கைது செய்து ஸ்டேஷனுக்கு கொண்டுசென்றார். எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் கடுமையாக தாக்கினர். ஜெயராஜ், பெனிக்ஸ் கைதாகி வந்தபோது நான் கோவில்பட்டி சிறையில் இருந்தேன். அவர்களிடம் பேசியபோது அவர்களை போலீசார் தாக்கியதை தெரிவித்தனர். அப்போது நானும் தாக்கப்பட்டதை அவர்களிடம் கூறினேன் என வாக்குமூலம் அளித்தார்.


latest tamil news



இந்த வாக்குமூலத்தை மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு தெரிவித்தார். உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், எஸ்.ஐ.,க்கள் இருவர் மீதும் முறையற்ற கைது, ஆயுதங்களால் தாக்கயது உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தார். வழக்கை டி.எஸ்.பி.,பொன்னரசு விசாரணை நடத்திவருகிறார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பதிவு செய்த இந்த வழக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பதிவு செய்திருந்தாலும் இதுவரையிலும் வெளியே வராமல் பார்த்துக்கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravikumar - MUSCAT,ஓமன்
15-ஜூலை-202012:15:52 IST Report Abuse
ravikumar போலீஸ் இந்த அணுகுமுறை மாற்றிக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X