தலைவர் பிறந்தநாளை மறந்துட்டாங்களா?| Dinamalar

தலைவர் பிறந்தநாளை மறந்துட்டாங்களா?

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (4)
Share
தலைவர், பிறந்தநாள்

'உங்க பிறந்த நாளை, மக்களுக்கு நினைவுபடுத்தி இருக்கீங்கன்னு புரியுது... அடுத்த ஆண்டு ஜமாய்த்து விடலாம்; கவலையை விடுங்க...' என, சொல்லத் துாண்டும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை:

இன்று என் பிறந்த நாளை முன்னிட்டு, உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக முடியவில்லை. இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அதுவே, என் பிறந்த நாள் பரிசு.

'அப்போ, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சமூக நீதி நிலைநாட்டப்படவில்லையா...' என, நெத்தியடியாக கேட்கத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; இது, வரவேற்கத்தக்கது. மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சட்டப்படி பெற வேண்டிய பங்கு குறித்து, புதிய நிர்வாகிகள், சமூக நீதியை நிலை நாட்ட முன்வர வேண்டும்.

'ஊரடங்கை பிறப்பிப்பதில், உங்களுக்குத் தான் எவ்வளவு ஆர்வம்...' என, வியப்பு தெரிவிக்கத் தோன்றும் வகையில், புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பேட்டி:


latest tamil news




வாரத்தில், ஒரு நாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, முதல்வரிடம், நான்கைந்து முறை கூறி விட்டேன். தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு உள்ளது. எனவே, புதுச்சேரியிலும், வாரத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

'ஏன், 1 கோடி ரூபாய் காப்பீடு கேட்கக் கூடாது...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன மாநில பொதுச்செயலர், திருச்செல்வன் அறிக்கை:

கொரோனா தொற்றுக்கு ஆளாகும், 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு உரிய சிகிச்சைக்கான ஏற்பாட்டை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் அனைவருக்கும், 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்.

'இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி, உங்களுக்கு தெரிந்த தகவலை, உங்கள் கட்சியின் இளைஞரணிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே...' என, தடாலடியாக பதில் சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

சி.பி.எஸ்.இ., பாடத் தொகுப்பிலிருந்து, இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை கருத்துகளை, கல்வி வாரியம் நீக்கியுள்ளது. இது, பன்முகத்தன்மைக்கு எதிரான, ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X