பாஜ.,வில் இணைய போவதில்லை: சச்சின் பைலட்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
Sachin Pilot, Congress, BJP, சச்சின் பைலட், காங்கிரஸ், பாஜ, சேரப்போவதில்லை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்ட சச்சின் பைலட் பாஜ.,வில் இணையப்போவதாக கூறப்பட்ட நிலையில், பாஜ.,வில் இணையும் எந்தவொரு திட்டமும் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் உட்கட்சி பூசலால், தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதற்காக சச்சினை துணை முதல்வர் பதவியில் இருந்தும், ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் பதவியில் இருந்தும் காங்., தலைமை அதிரடியாக நீக்கியது. ஆனால் காங்.,சில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை.


latest tamil news


இது தொடர்பாக என்டிடிவி., செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: நான் பாஜ.,வில் இணையப் போவதில்லை. பாஜ.,வில் இணையும் எந்தவொரு திட்டமும் என்னிடம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னை பாஜ., உடன் தொடர்புப்படுத்துவது என்னை இழிவுப்படுத்தும் முயற்சியாகும். நான் இன்னும் காங்கிரஸை சேர்ந்தவன் தான். தனது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும். ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நோட்டீஸ்


இந்நிலையில் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 2 நாளில் விளக்கமளிக்கவில்லை எனில் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ததாக கருதப்படும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-202019:43:38 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Sachin Pilot married Sara Abdullah on 15 January 2004. Sara Abdullah is the daughterof Farooq Abdullah, chairman of Jammu
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
15-ஜூலை-202019:12:07 IST Report Abuse
mrsethuraman  பாஜக : வட போச்சே
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூலை-202017:28:49 IST Report Abuse
இந்தியன் kumar இத்தாலிய குடும்பத்தினர் தங்கள் நலனுக்காக கட்சியை பலி கொடுக்கின்றனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X