பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று, இன்று(ஜூலை15) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், தற்போது கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (14ம் தேதி) ஒரே நாளில், 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. கோவையில் நேற்று வரையில், 1,480 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தற்போது கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, வருவாய்துறை, ஊராட்சித்துறை, பி.ஏ., பொது, பி.ஆர்.ஓ., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அலுவலர்கள் என, 60 பேர் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் இன்றும், நாளையும் பரிசோதனை நடக்கவுள்ளது. முதல்தளத்தில் உள்ள கலெக்டர் சேம்பர் மூடப்பட்டு, அலுவலர்களை விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட கலெக்டருக்கே கொரோனா ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
15-ஜூலை-202019:37:56 IST Report Abuse
Raj யாரையும் விடாது போல
Rate this:
Cancel
15-ஜூலை-202018:10:59 IST Report Abuse
ஆப்பு சும்மா சுத்துனா கொரோனா பாதிப்பு வரும்னு மக்களை அடிச்சு முடக்குனாங்களே...
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
15-ஜூலை-202017:02:27 IST Report Abuse
Chandramoulli கடுமையான உழைப்பாளி. எளிதில் அணுகக்கூடிய கலெக்டர் . E பாஸ் வேண்டாம் என்று எச்சரித்தவர் . கூடிய விரைவில் குணம் அடைந்து பணிக்கு திரும்ப வேண்டும். கடவுளை பிரார்த்திப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X